Vaaranasi: எடுத்து வை 2 ஆயிரம் கோடி!.. வாரணாசி பட கதை இதுதான்!.. டீசர் டீகோடிங்!..
பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற மெகா பட்ஜெட் படங்களை உருவாக்கி இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ராஜமௌலி. தெலுங்கில் ஒரு படத்தை உருவாக்கி அதை தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகும் பேன் இண்டியா படமாக மாற்றி 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளலாம் என்கிற வித்தையை சொல்லிக் கொடுத்தவர்தான் ராஜமௌலி.
ராஜமௌலி வந்தபின் தெலுங்கு சினிமாவின் தரம் உயர்ந்து விட்டது. தெலுங்கு சினிமாவுக்கு தேசிய விருதுகளே அதிகம் கிடைக்காத நிலையில் RRR படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக முதல் ஆஸ்கர் விருதை வாங்கி கொடுத்தார் ராஜமௌலி. தற்போது மகேஷ்பாபுவ வைத்து வாரணாசி படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரித்திவிராஜ், கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற படங்களுக்கு இசையமைத்த கீரவாணி இசையமைத்திருக்கிறார். நேற்று இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார்கள். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த விழா நடைபெற்றது.
தெலுங்கு திரையுலகில் முதல் முதலாக ஒரு முழு படத்தையும் ஐமேக்ஸ் பார்மெட்டில் எடுத்திருக்கிறேன் என மேடையில் ராஜமௌலி கூறினார். இந்நிலையில், டைட்டில் டீசரை பார்த்து ரசிகர்கள் படம் எப்படி இருக்கும்? என்ன மாதிரியான கதை? என்பதை டிகோடிங் செய்ய துவங்கி விட்டனர்.

ராஜமௌலிக்கு ராமாயணமும், மகாபாரதமும் மிகவும் பிடிக்கும். எனவே அதை அடிப்படையாக வைத்து அவர் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 படங்களில் கூட மகாபாரத ஸ்டைல் இருக்கும். RRR படத்தில் வரும் ராம்சரணின் கதாபாத்திரம் ராமனை ஒத்திருக்கும். படத்தின் இறுதிக்காட்சியில் அவரை ராமர் போலவே காட்டியிருப்பார் ராஜமௌலி. தற்போது வாரணாசி படமும் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள் சிலர்.
டீசரின் முதல் காட்சியில் முனிவர்கள் செய்யும் யாகத்தால் வானிலிருந்து ஒரு எரி கல் அண்டார்டிகா கடல் பகுதியில் விழுகிறது. அதற்கடியில் இருந்து ஒன்றை காட்டுகிறார்கள். அதன்பின் ஆப்பிரிக்கா காடு, இராமாயண யுத்தம் நடந்த லங்கா நகரம் போன்றவற்றை காட்டுகிறார்கள். அனுமனை பிரம்மாண்டமாக காட்டுகிறார்கள். ராமன் வில்லிலிருந்து அம்பை விட அந்த வெளிச்சம் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் விழுவது போல காட்டுகிறார்கள்.
Globetrotter, Timetrotter என போடுகிறார்கள். Globetrotter என்றால் உலகை சுற்றி வருபவன் என அர்த்தம். Timetrotter எனவும் டீசரில் குறிப்பிட்டிருப்பதால் உலகம் சுற்றும் ஒருவன் டைம் டிராவலும் செய்வது போல வாரணாசி படத்தை ராஜமௌலிஉருவாக்கியிருப்பார் என சொல்கிறார்கள் ரசிகர்கள்.

விண்ணில் இருந்து எரிக்கல் விழுந்து அதன் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டு ஹீரோ உருவாகி அவன் உலகெங்கும் பல இடத்திற்கும் செல்கிறான். அவன் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறான். அந்த நோக்கத்தை கெடுக்க வில்லன் பிரித்திவிராஜ் வருகிறான். இருவருக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் வாரணாசி என புட்டு புட்டு வைக்கிறார்கள். இந்து புராணத்தில் டைம் டிராவலையும் கலந்து ஒரு பேண்டஸி அட்வென்ச்சர் திரில்லர் படமாக வாரணாசி இருக்கும் என்பது டைட்டில் டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.
வாரணாசி 512 CE, 2027 E, 7200 BCE என டீசரில் பல கால கட்டங்களை காட்டுவதால் படத்தின் நாயகன் மகேஷ் பாபு டைம் டிராவல் மூலம் பல காலத்திற்கும் சென்று வில்லன் பிரித்திவிராஜின் நோக்கத்தை முறியடிப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது வாரணாசி படம் 2 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என்றே கணிக்கப்படுகிறது.
