×

20 வயசு குறைஞ்சிப் போச்சு!.. திரிஷா வெளியிட்ட வீடியோ...கதறும் ரசிகர்கள்.....

 
trisha

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளின் தோழியாக நடித்து வந்தவர் திரிஷா.  லேசா லேசா திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் 2001ம் ஆண்டு வெளியானது. கடந்த 20 வருடங்களாக திரைத்துறையில் நீடித்து வருகிறார். இதில் சில வருடங்கள் அவர் முன்னணி கதாநாயகியாக அவர் வலம் வந்தார். விஜய், அஜித், கமல், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமா உலகிலும் கால் பதித்து முன்னணி நடிகையாக மாறினார்.  

trisha

அதன்பின் நயன்தாராவின் மார்கெட் உச்சத்தில் செல்ல திரிஷாவின் மார்கெட் கீழே இறங்கியது. அதோடு, ஹன்சிகா, அனுஷ்கா போன்றவர்களும் போட்டியில் வர மார்க்கெட் இழந்தார். அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிகை குறைந்து போனது. மேலும், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்த அவர் அதிலிருந்தும் ஒதுங்கி இருந்தார். திடிரென சிம்புவுடன் அவர் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் 96 படத்தில் அவரின் நடிப்பும் பாராட்டை பெற்றது. அதன்பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

trisha

இந்நிலையில், கடந்த சில நாட்களாக டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இட்டு வருகிறார். டிவிட்டரில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவித்து புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம க்யூட்டான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு 20 வயசு குறைஞ்சி போச்சு’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News