த்ரிஷாவுக்கு பாராட்டு, ரஜினிக்கு அர்ச்சனை... சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் அட்ராசிட்டி!
ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகை த்ரிஷாவை பாராட்டிவிட்டு, நடிகர் ரஜினியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கோலிவுட்டின் 'தளபதி'-யாக மாஸ் காட்டிக் கொண்டிருந்த விஜய் இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக உள்ளார். விஜய் நடிப்புக்கு குட் பை சொன்னாலும், அவர் நடித்து முடித்த கடைசி படமான 'ஜன நாயகன்' இன்னும் வெளிவரவில்லை.
நேற்று (ஜூன் 22) விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல திரையுலக பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆனால், எப்பவும் விஜய்யின் பிறந்தநாளன்று கரெக்டாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்து வந்த பிரபல நடிகை த்ரிஷா இந்தமுறை ஒரு பதிவும் போடவில்லை.
விஜய் ரசிகர்களோ த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் போனதற்கு அவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அவருக்கு பதிலாக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை? என்று பதிவிட்டு கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை திட்டி வருகின்றனர்.
