Connect with us
santhanam ram bala

Cinema News

எங்க தலைவரையா கலாய்க்குற!.. சந்தான பட இயக்குனருக்கு வெடிக்குண்டு அனுப்பிய ரசிகர்கள்!..

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பிடித்த டிவி சேனல்களில் முக்கியமான சேனல் விஜய் டிவி. சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி முதல் பிக் பாஸ் வரை பல காலங்களாக விஜய் டிவி தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.

அதில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாகதான் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்ற பலரும் சினிமாவிற்கு வந்தனர். இந்த நிலையில் சந்தானத்தை சின்ன திரையில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதான் லொள்ளு சபா.

lollu sabha

lollu sabha

தமிழில் அப்போது வெளியாகியிருந்த பல திரைப்படங்களை கலாய்த்து ஒரு நிகழ்ச்சியாக செய்து இந்த லொள்ளு சபா நிகழ்ச்சி வெளியாகி வந்தது. இயக்குனர் ராம்பாலா இந்த நிகழ்ச்சியை இயக்கி வந்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனில் துவங்கி, ரஜினி,கமல்,விஜய், அஜித் என பல நடிகர்களை இந்த நிகழ்ச்சியில் வைத்து செய்தனர்.

ரசிகர்கள் அனுப்பிய பரிசு:

இடையில் ஒரு விழாவில் லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு விருது வழங்கப்பட்டது. அதில் நடித்த நடிகர் ஜீவா கூறும்போது “நிகழ்ச்சியை நடத்தும்போது தொடர்ந்து எங்களுக்கு நிறைய எச்சரிக்கைகள் ரசிகர்களிடம் இருந்து வந்தது. அதில் அதிகப்பட்சமாக ஒரு சம்பவம் நடந்தது.

சினிமா ரசிகர் யாரோ ஒருவர் பெட்டியில் வெடிக்குண்டை வைத்து அதை சாமிநாதன், இயக்குனர் ராம் பாலா இன்னும் பிற நடிகர்கள் வீட்டிற்கு அனுப்பினார்கள். இன்னமும் இணையத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சிகள் காணக்கிடைக்கின்றன. அதை பார்த்து மீண்டும் யாரும் வெடிக்குண்டை அனுப்பிவிடாதீர்கள்” என அவர் கூறியிருந்தார்.

Continue Reading

More in Cinema News

To Top