×

விருவிருப்பாக செல்லும் பாரதி கண்ணம்மாவில் அடுத்தது என்ன? ரகசியத்தை உடைத்த வெண்பா...

சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா என்ற பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
Bharathi kanama

சீரியல் ரசிகர்களுக்கு இப்போது நிறைய கொண்டாட்டமாக இருக்கும். காரணம் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சில சீரியல்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது. அப்படி விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை ரசிக்க வைக்கும் ஒரு சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்.

பாரதி ஹேமாவை வெளிநாடு கூட்டி செல்ல விரும்ப இடையில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. பின் அவரை மருத்துவமனையில் குடும்பத்தார் சேர்க்கிறார்கள்.

ஹேமாவை குணப்படுத்த சமையல் அம்மாவால் முடியும் என மருத்துவர் கூற பாரதி கண்ணம்மாவை அழைக்க செல்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

இதற்கு இடையில் சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா என்ற பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் போலீசிடம் சிக்கியது போல் தெரிகிறது. அப்படி நடந்தால் பாராதியும் கண்ணமாவும் சேர்ந்து விடுவார்கள் போல, அப்போ சீரியல் சீக்கிரம் முடிய போகுதுனு சொல்லுங்க என்கின்றனர் ரசிகர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News