என் பையன் முன்னாடி இப்படி தான் செய்வேன் - சீரியல் நடிகை பளீச்!

 
fareena azad

நடிகை ப்ரீனா அசாத்: 

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் பரீனா அசாத். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற பல சேனல்களில் பணியாற்றி இருக்கிறார் .

farina azad

கிச்சன் கலாட்டா ,அஞ்சறைப்பெட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பரீனா தோன்றியிருக்கிறார். இதனிடையே சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு பாரதி கண்ணம்மா தொடரில் நெகட்டிவ் ரோலில் வில்லி ரோலில் நடித்து அசத்தி இருந்தார் .

சீரியல்கள்: 

இதில் அவரது எதிர்மறையான கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டது. திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் பரீனா சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

அதில் அவர் கூறி இருப்பதாவது... முதலில் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை தவிர்த்து ஆண் பிள்ளைகள் எப்படி பெண் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். நான் என் வீட்டில் சின்ன சின்ன ஆடை... ஷார்ட்ஸ் எல்லாம் அணிந்து கொண்டு இருப்பேன். 

என் பையனுக்கு சொல்லிக்கொடுப்பது:

fareena

என் பையன் அதை பார்க்கும்போது அவனுக்கு அது சாதாரணமான விஷயமாக தெரியும் வெளியில் சென்று வேறு ஏதாவது ஒரு பெண் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்றால் அது அவனுக்கு கவர்ச்சியாகவோ அசிங்கமாகவோ தெரியாது.

எனவே இது அவன் பார்த்து பழகி விட்டான். அதனால் பெண் பிள்ளைகளை ஒரு கவர்ச்சியான பார்வையில் பார்த்து தப்பான நோக்கத்தில் அவன் பார்க்கக் கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே நாம் சொல்லிக் கொடுத்து அடிப்படையாக வளர்த்தோமானால் அந்த குழந்தை பெண்களை மதிக்கும் குழந்தையாக பின்னாலில் வளரும் என்றார் பரீனா. 

Tags

From Around the web