×

உணர்வுப்பூர்வமானது... பட்டாசு வெடிப்பு... முதல்வருக்கு நன்றி சொல்லி நெகிழும் விவசாயிகள்
 

கொரோனா, புயல் மற்றும் ஜனவரி மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12,110 கோடி கூட்டறவு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
 
 

விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன் என்று எப்போதும் தெரிவித்து வந்துள்ளார். அதன்படி, தற்போது கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி கூட்டறவு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரணம் அறிவித்து அதனை ஏக்கருக்கான உச்சபட்ச அளவையும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக விவசாய கடனை தள்ளுபடி செய்த ஒரே அரசு அ.தி.மு.க அரசுதான். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பிற்கு பல விவசாய சங்க தலைவர்களும் வரவேற்று, நன்றி தெரிவித்து வருகின்றனர்.

``ஏற்கனவே கொரோனா, புயல், அதீத மழை போன்ற விஷயங்களால் மிகவும் கஷ்டத்தில் இருந்த விவசாயிகளுக்கு முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது, இதை நாங்கள்  வரவேற்கிறோம், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு  தனது மகிழ்சியை வெளிபடுத்தி இருக்கிறார்.

``முதல்வர் தஞ்சை வரும்போது  நாங்கள் அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் மிக முக்கியமானதாக, கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இன்றைக்கு முதல்வர் அதை சட்டமன்றத்தில் அறிவித்து எங்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் வெறும் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், தேர்தலுக்கு முன்பே இந்த அறிவிப்பை மேற்கொண்டது உணர்வுபூர்வமானது” என்று காவேரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் விமலநாதன் தெரிவித்தார்.

எதிர்பாராத நேரத்தில் வந்த இந்த அறிவிப்பை நாங்கள் பாராட்டி, நன்றி தெரிவித்து வரவேற்கிறோம் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல பகுதகளில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

From around the web

Trending Videos

Tamilnadu News