×

சிக்ஸ்பேக் உடலோடு மோதப்போகும் அப்பா மகன் – ரசிகர்களுக்கு செம்ம டிரீட்!

விக்ரம்மின் 60 ஆவது படத்துக்காக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் சிக்ஸ் பேக் உடலுக்கு மாறிவருகின்றனராம்.

 

விக்ரம்மின் 60 ஆவது படத்துக்காக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் சிக்ஸ் பேக் உடலுக்கு மாறிவருகின்றனராம்.

ஜகமே தந்திரம் திரைப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இதில் விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவருமே சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி வருவதாக சொல்லப்படுகிறது. விக்ரம் கதாபாத்திரங்களுக்காக தன் உடலமைப்பை மாற்றி நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே அந்த வகையில் இப்போது துருவ் விக்ரமும் இணைந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News