×

கல்லூரி மாணவியோடு ஓடிய தந்தை…  2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட தாய்!

புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவருடன் கணவர் ஓடியதால் அவமானத்தில் தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு தாய்.

 

புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவருடன் கணவர் ஓடியதால் அவமானத்தில் தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு தாய்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள்  முத்து மற்றும் ராதா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு இடியாக அமைந்தது முத்துவின் கள்ளக்காதல். முத்துவுக்கு 22 வயது கல்லூரி மாணவி ஒருவரோடு தகாத உறவு ஏற்பட்டு அதை ராதா கண்டித்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கு இடையே கடுமையாக சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் முத்து அந்த மாணவியை அழைத்துக்கொண்டு தலைமறைவான இடத்துக்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ராதாவுக்கு மிகுந்து சோகத்திலும் விரக்தியிலும் இருந்துள்ளார். இதனால் தனது அறையின் கதவைத் தாழிட்டு இரண்டு மகன்கள் மேலும் தன் மேலும் மண் எண்ணேய்யை ஊற்றி கொளுத்திக் கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராதாவும் இளையமகனும் உடல் கருகி எரிந்துவிட, இளையமகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். ஆனால் இன்னமும் முத்துவைப் பற்றியும் ராதாவைப் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News