×

தந்தையின் காம வெறி... பலியான 16 வயது மகள்... நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டு பகுதிக்கு அடுத்து வடுகப்பட்டி எனும் பகுதி உள்ளது.  இப்பகுதியில் கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணியம் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அவரின் மகள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
 
 

இந்நிலையில், மாணவியின் வயிற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதைக்கண்டு சந்தேகமடைந்த அவரின் தாய் மற்றும் உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் கூறியது கேட்டு அவர்களுக்கு தலையே சுற்றியது.

பாலசுப்பிரமணியம் மகள் வீட்டில் தனியாக இருந்த நேரங்களில் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.  இதுகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பாலசுப்பிரமணியத்தின் மீது நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

எனவே, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News