காதலர் தினத்தில் சூப்பர் அறிவிப்புடன் காத்திருக்கும் விக்னேஷ் சிவன்... குஷியின் நயன் ரசிகர்கள்

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மாஸ் ஹிட் அடித்தது. அது அவருக்கு பெரிய வளர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து, நயனின் காதலராகவும் ப்ரோமோஷன் பெற்றார்.
தொடர்ந்து, விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் இவரின் வெற்றி கூட்டணியான விஜய் சேதுபதி, நயனுடன் சமந்தாவும் இணைந்து நடித்து வருகிறார்.
படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இது நயனின் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்பை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Feb 14th announcement coming your way today🥳🥳 #KaathuVaakulaRenduKaadhal
— Vignesh Shivan (@VigneshShivN) February 10, 2021
Second schedule wrapped up neatly by God’s Grace 🥳😇❤️🧿🧿🧿 @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @sreekar_prasad @KVijayKartik @Rowdy_Pictures @7screenstudio pic.twitter.com/NioFH5X8VC