×

மத்திய அரசின் உத்தரவு படி இ - பாஸ் முறை ரத்து!

கொரோனா ஊரடங்கினாள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள்  மாநிலங்களுள்ளேயே வெவ்வேறு இடங்களில் செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருமணம் , இறப்பு, மருத்துவம் தொடர்பான சில முக்கிய காரணிகளுக்கு மட்டும் அனுமதித்து  இ - பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

இதையடுத்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ - பாஸ் வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.  

இந்நிலையில் சற்றுமுன் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் இன்று முதல் இ - பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரிக்கு செல்லவும் புதுச்சேரியிலிருந்து பிற மாநிலங்கள் செல்லவும் இ - பாஸ் தேவையில்லை என்று அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News