×

மாமியாருடன் சண்டை: தற்கொலை செய்துகொண்ட மருமகள் – கணவன் எடுத்த முடிவு !

வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் வசித்து வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது கணவர் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் வசித்து வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது கணவர் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தன் மனைவி நிர்மலா மற்றும் சஞ்சனா ஸ்ரீ மற்றும் ரித்திகா ஸ்ரீ ஆகியோரோடு சந்தோஷமாக வாழ்ந்து ரவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் செவிலியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அங்கு குடிபெயர்ந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ராணிப்பேட்டையில் உள்ள வெங்கடேசனின் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நிர்மலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்துப் போகாததால் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி நிர்மலா தூக்குமாற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விஷயம் அறிந்து அதிர்ந்து போன வெங்கடேசன், தன் குழந்தைகளோடு ராணிப்பேட்டை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று ரயிலில் மோதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News