Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆர் மூக்கை சொரிந்ததால் மரத்தை வெட்டிய படக்குழுவினர்… என்னய்யா சொல்றீங்க??

மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர், நடிக்க வந்த புதிதில் பல சிக்கல்களையும், அவமானங்களையும் சந்தித்து வந்தவர். அதை விட கொடுமை என்னவென்றால் வறுமை பஞ்சமே இல்லாமல் அவரை சூழ்ந்துகொண்டிருந்தது.

தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், “சாயா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் நின்றுப்போனது. அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் “ராஜகுமாரி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

MGR

அதன் பின் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக திகழ்ந்தார். ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களிடையே மிகுந்த செல்வாக்குமிக்கவராக வலம் வந்த எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்து மக்களில் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அதிகளவிலான செல்வாக்குக்கு ஒரு உதாரணமாக அமைந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் தமிழின் மிகப்பெரிய நடிகராக வளர்ந்தப் பிறகு அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளுமே சில விஷயங்களை குறிப்பதுபோல் இருக்குமாம். அதாவது படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் முகம் இறுக்கமாகி, தனது மூக்கை சொரிந்தார் என்றால் அந்த சூழலில் நடக்கின்ற ஏதோ ஒன்று அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்.

MGR

இப்படித்தான் ஒரு முறை ஒரு படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் தற்செயலாக தனது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஒரு மரத்தை பார்த்து தனது மூக்கை சொரிந்திருக்கிறார். உடனே படக்குழுவினர் அந்த மரத்தை வெட்டிவிட்டார்களாம்.

அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர், “என்னப்பா இங்கிருந்த மரத்தை காணும்?” என கேட்க, அதற்கு அவர்கள் “நீங்கள் நேற்று மூக்கை சொரிந்துகொண்டே அந்த மரத்தை பார்த்தீர்கள். அதனால் உங்களுக்கு அந்த மரத்தை பிடிக்கவில்லை போல என்று நினைத்து வெட்டிவிட்டோம்” என கூறினார்களாம்.

Published by
Arun Prasad