Categories: Cinema News latest news throwback stories

பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்!.. யார் யார்னு தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றோரை தமிழ் சினிமாவின் முக்கிய தூண்கள் என கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்தவர்கள் இவர்கள் இருவரும்.

அதிலும் பாரதிராஜா பல புது முக நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பாக்கியராஜ், மனோபாலா போன்றவர்கள் எல்லாம் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தனர்.

Bharathiraja

நடிகை ரேவதி, நடிகர் பாண்டியன், சுதாகர், ராதிகா போன்றோரை பாரதிராஜாதான் அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டார். அதே போல அந்த சமயத்தில் அவர் இயக்கிய படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை எடுக்கும் வித்தையை கற்று வைத்திருந்தார் பாரதிராஜா.

தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் கூறும்போது பல நடிகர்களை நான் வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்துள்ளனர். அதில் முதலாமானவர் மணிரத்னம்.

மணிரத்னம் முதன் முதலாக என்னிடம் கதை சொல்வதற்காக வந்தார். அப்போது என்னிடம் தொடர்ந்து அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போதெல்லாம் எனக்கு ஆங்கிலமே தெரியாது. அதனால் அவரை அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவர் பெரும் இயக்குனரானார்.

அதே போல நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் என்னிடம் வாய்ப்பு கேட்டனர். அப்போது நான் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்தேன். இப்போது அவர்கள் அனைவருமே பெரும் உச்சத்தை தொட்டுள்ளனர். என பாரதிராஜா கூறினார்.

இதையும் படிங்க: பிரமாண்ட இயக்குநர் மகள்… ஸ்கூலில் படிக்கும்போதே இப்படியா? – ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்

Rajkumar
Published by
Rajkumar