×

படப்பிடிப்புகள் நடத்தலாம் ஆனால்...  மத்திய அரசின் கண்டீஷன்ஸ்!

கொரோனா ஊரடங்கினாள் மக்களின் இயல்பு வழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக வேலைகளை இழந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

 

இதில் சினிமா படப்பிடிப்புகளும் தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுலிருந்து தனிமனிதர் ஒவ்வொருவரும் தம்மை தாமே பாதுகாத்துகொள்வேண்டும் என்ற முறையை அறிவுறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை மத்திய , மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்ப்போது சினிமா படப்பிடிப்பு தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்,

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கட்டாயம் கையுறை அணியவேண்டும். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News