×

லாக்டவுன் நேரத்தில் ரசிகர்கள் தேடிய படங்கள் – ரஜினியை முந்திய விஜய் மற்றும் லாரன்ஸ்

தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் கொரோனா லாக்டவுனில் இந்திய அளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட நடிகர்கள் படங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

 

தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் கொரோனா லாக்டவுனில் இந்திய அளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட நடிகர்கள் படங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டு பாக்ஸ் ஆபிஸீல் ரஜினியை சில வருடங்களுக்கு முன்பாகவே  விஜய்யும் அஜித்தும் முந்திவிட்டனர். ஆனால் உலகளாவிய வியாபாரத்தால் ரஜினியே இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகளவில் தேடி பார்த்தது விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் படங்களைதான் என தெரிவித்துள்ளது ஒரு ஆய்வு.

விஜய்யின் படத்தை 117.9 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அவரது திரைப்படத்தை 76.2 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர்.அதற்கு அடுத்த இடத்தில் ரஜினி படங்கள் 65.8 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அஜித் படங்கள் பற்றி எந்த தகவலும் இதில் இல்லை.

சமீபத்தில் விஸ்வாசம் திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டபோது டி ஆர் பி ரேட்டிங்கில் சாதனை படைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அஜித் படங்கள் அந்த பட்டியலில் இல்லை என்பதால் ஆய்வு முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News