×

பிறந்தநாளில் கமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – பரபரப்பில் லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையில் இப்போது கமலே நடிக்க உள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட உள்ளனர்.

அந்த படத்துக்கு எவன் என்று நினைத்தாய் அல்லது குரு எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டோஷூட் சில வாரங்களுக்கு முன்னால் சென்னையில் நடந்தது. இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு ஆகியவை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News