Connect with us
parthiban sivaji

latest news

தமிழ் சினிமாவுல முதன்முதலா ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம்… அப்பவே அது சூப்பர்ஹிட் படமாச்சே!

டைட்டிலைப் பார்த்ததுமே அது என்ன படம்னு கேட்கத் தோன்றுகிறது அல்லவா. மேலே உள்ள படத்தில் ஹீரோ மிஸ்ஸிங். அப்படின்னா எந்தப் படம்னு கண்டுபிடிங்க. தமிழ்சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலத்தில் வந்த படம் தான். 1984ல் வெளியானது. இவ்வளவுக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி படமோ, கமல் படமோ இல்லை. ஆனால் யாராக இருக்கும் என்று கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

Also read: அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்‌ஷன்

1984ல் பாக்கியராஜ் நடித்து இயக்கிய படம் தாவணிக்கனவுகள். அவருடன் இணைந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் அது மட்டும் அல்லாமல் பாக்கியராஜின் குருநாதர் டைரக்டர் பாரதிராஜா அவராகவே நடித்து அசத்தி இருந்தார். அந்த வகையில் பாக்கியராஜ் குருநாதரையே இயக்கியவர் என்று சொல்லலாம். அது மட்டும் அல்லாமல் நடிகர் திலகத்திற்கும் அவர் இயக்குனராக இருந்த முதல் மற்றும் கடைசி படம் இதுதான்.

இவர்களுடன் இணைந்து ராதிகா, இளவரசி, உமாபரணி, நித்யா, கோகிலா, பிரியதர்ஷினி, பூர்ணிமா ராவ், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாக்கியராஜின் சிஷ்யன் பார்த்திபனும் நடித்துள்ளார். அதே போல பாக்கியராஜின் உதவி இயக்குனர்களில் ஒருவரான சித்ரா லட்சுமணனும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

dhavanikanavugal

dhavanikanavugal

அவர் படத்தில் தபால்காரராக வருகிறார். படத்தில் பாக்கியராஜிக்கு 5 தங்கைகள். அவர்களைத் திருமணம் செய்து கொடுப்பதற்குப் படாதபாடு படுகிறார். கடைசியில் அதில் வெற்றி அடைந்தாரா என்பது தான் கதை. படத்தில் ராதா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

பாக்கியராஜ், சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமும், ஹீரோயிசமும் கலந்து வழக்கம்போல நடித்து அசத்தியுள்ளார். கேப்டன் சிதம்பரம் என்ற கேரக்டரில் அதாவது முன்னாள் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படத்தில் நடித்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். அனைத்தும் பார்வையாளர்களைக் கவரும் ரகங்கள் தான். மாமோய், ஒரு நாயகன், செங்கமலம் சிரிக்குது, வானம் நிறம் மாறும் ஆகிய பாடல்கள் உள்ளன.

Also read: ஒரு 20 தடவ கேட்டுருப்பேன்!.. இத நீங்க தான் எழுதுனீங்களா?.. செல்வராகவனை பிரமிக்க வைத்த இயக்குனர்!..

படத்தில் பாக்கியராஜின் சென்டிமென்ட் காட்சிகள் வழக்கம் போல ஒர்க் அவுட் ஆகியுள்ளது. குறிப்பாகத் தாய்மார்களைக் கவரும் விதத்தில் படம் இருக்கிறது. இது தான் படத்தில் அதிரிபுதிரி வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா தமிழ்சினிமாவுலயே இதுதான் முதன் முதலில் 1 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனதாம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top