×

ஐந்து வகை சாதம்… தட்டு நிறைய சீர்… போலிஸ் ஸ்டேஷனில் நடந்த வளைகாப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு அங்கேயே வளைகாப்பு விழா நடந்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு அங்கேயே வளைகாப்பு விழா நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் மீரா. இவரது கணவர் விஜயகுமார் அரசுப் பள்ளி ஆசிரியர். இவர்கள் இருவரும் பணி காரணமாக கிருஷ்ணகிரியில் தங்கியுள்ளனர். இவர்களின் பெற்றோர் திருச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் மீரா 7 மாத கர்ப்பமாக இருக்க, வளைகாப்பு நடத்த அவர்களது பெற்றோர்களால் கிருஷ்ணகிரிக்கு வர முடியவில்லை. இதனால் மீரா மனமுடைந்து விடக் கூடாது என நினைத்த பர்கூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கற்பகம், ஸ்டேஷனிலேயா மீராவுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்து, பாரம்பர்ய முறைப்படி சீர்வரிசை செய்து ஐந்து வகை சாதத்தோடு வளைகாப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் மீராவின் கணவரும் கலந்துகொண்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News