×

வெற்றிமாறன் இயக்கத்தில் கொடிகட்டி பறந்த படங்கள் 

 
adu

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகையே அலற விட்டவர் வெற்றி மாறன். இவரின் இயக்கத்தில் அவ்வளவு வீரியம் இருந்தது. ஆடுகளம் படக்கதையில் வரும் மண்ணின் வாசனை படம்பார்க்கும் ரசிகர்களின் மூக்கைத் துளைத்தது.

அதனால் தானோ என்னவோ 2011ல் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரட்டை விருதுகளைப் பெற்றார். 

மொத்தத்தில் ஆடுகளம் படம் ஆறு தேசிய விருதுகளை அள்ளியது. 

இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்....அதான் பெயரிலேயே வெற்றியை வைத்துள்ளாரே அந்த மாறன் தான்..! இவருக்கு இன்று பிறந்தநாள். 

கடலூரைச் சேர்ந்த வெற்றி மாறன் 4.9.1975ல் பிறந்தார். ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 15 வயதில் இருந்தே சினிமா ஆர்வம் வந்து விட்டது. சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போதுதான் பேராசிரியர் ராஜநாயகம் சினிமா ஆர்வத்தை மேலும் அவருக்கு அதிகரிக்கச் செய்தவர்.

சினிமா தான் உன் எதிர்காலம். அதில் நீ உற்சாகமாக ஈடுபடு என்றார். அவரே இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வெற்றிமாறனை சேர்த்து விட்டார். 

காலேஜ் படிக்கும்போதே ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து மணமுடித்தார். பூந்தென்றல் என்று ஒரு மகள் உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான அதிரடி படங்கள் சிலவற்றைப் பார்ப்போம். 

பொல்லாதவன்

poo

2007ல் தனுஷ் நடிக்க வெற்றி மாறன் இயக்கிய படம். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். தனுஷ_டன் திவ்யா ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி, சந்தானம், கருணாஸ், முரளி, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். 4 விஜய் விருதுகளை அள்ளிய படம் இது. 

எங்கேயும் எப்போதும், மின்னல்கள் கூத்தாடும், அலிபாபா தங்கம், நீயே சொல், படிச்சு பாத்தேன் ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. படத்தின் பெயரோ தனுஷின் மாமனார் ரஜினி நடித்த பொல்லாதவன் படம். படத்தின் பாடலோ நினைத்தாலே இனிக்கும் படத்தின் ரீமிக்ஸ் சாங். எங்கேயும் எப்போதும் என்ற பாடல் ரீமிக்ஸ் ஆக வந்துள்ளது. 

ஆடுகளம் 

2011ல் வெளியான அதிரி புதிரி வெற்றித்திரைப்படம். ஜி.வி.பிரகாஷ்குமாரின் அதிரடி இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. தனுஷ{டன் டாப்சி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு சிறந்த இயக்குனருக்கான தங்கத்தாமரை விருது கிடைத்தது. 

சேவல் சண்டை தான் படத்தின் மையக்கரு. அதை எவ்வளவு அழகான ஒளிப்பதிவுடன் செமயாக சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன். குரு சிஷ்ய உறவுக்குள் குருவையும் மீறி களத்தில் இறங்குகிறார் தனுஷ். வெற்றி கண்டாரா என்பதை வெண்திரை விளக்குகிறது. அய்யய்யோ, போர்க்களம், ஒத்த சொல்லால ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

விசாரணை 
2015ல் வெளியான படம். வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த விசாரணையில் தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ், ஆனந்தி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். 

வடசென்னை 

vbdg


வடசென்னை பகுதியில் வாழும் 35 ஆண்டுகால அரசியல் படம். தனுஷ், கேரம் வீரராக நடித்துள்ளார். சமுத்ரகனி, சு.பால்கரன உள்பட பலர் துடி துடித்து சாக வேண்டும். சமுத்ரகனி, ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்தம்மாவால, என்னடி மாயாவி நீ, மாடில நிக்குற மான்குட்டி, எங்கேயும் எப்போதும், வடசென்னை உள்பட பல பாடல்கள் நிறைந்தது. 

கோவிந்தம்மாவால, என்னடி மாயாவி நீ, மாடில நிக்குற ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

அசுரன் 

asu


2019ல் வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படம் வெளியானது. டிசம்பர் 21 2018ல் வெளியானது. படத்தில் மஞ்சுவாரியர், கேன் கருணாஸ், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளார். சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றார். 
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட் ரகங்கள். இப்படத்தின் வசனத்தை வெற்றி மாறன் எழுதியுள்ளார். வேல்ராஜின் ஒளிப்பதிவு உன்னதம். 

வெற்றிமாறனுக்கும் தனுஷ{க்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகுது பாருங்க. படத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். 

நம்ம டீம் சார்பாக வெற்றிமாறனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News