1984ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான சூப்பர் த்ரில்லர் படம். விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு முன் மணிவண்ணன் ஜனவரி 1 உள்பட பல படங்கள் எடுத்திருந்தாலும் இந்த படம்தான் மாஸ்.
பின்னணி இசை: இளையராஜா பின்னணி இசையில் மிரட்டி இருப்பார். குறிப்பா சொல்லணும்னா சர்ச்சில் சத்யராஜ் துரத்தி வருவார். அப்போது வரும் இசை நம் இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கும். இந்தப் படம் தான் சத்யராஜிக்கும் மாஸ் கொடுத்தது. வில்லன் ரோலில் மொட்டை போட்டு அட்டகாசமாக கெத்து காட்டினார். கூலிங் கிளாஸ் உடன் பார்க்கும் போது அவர் வேற லெவல்.
சஸ்பென்ஸ்: இந்தப் படத்தில் மணிவண்ணன் வைத்த சஸ்பென்ஸ் இதுதான். முதல்ல மொட்டைத்தலை தான் வில்லன்னு காட்டுவாங்க. ஆனா சத்யராஜோ தாடி மீசையோடு வருவார். எப்படா அந்த மொட்டைத்தலை வருவான்னு நம்மை காட்சிக்குக் காட்சி திகிலில் உறைய வைத்து விடுவார். விஜயகாந்துக்குக் கௌரவ வேடம்தான். படத்தின் நாயகன் மோகன்தான். என்றாலும் விஜயகாந்த் வருவதால் இதை விஜயகாந்த் படம் என்பார்கள்.
கிளைமாக்ஸில் வில்லன்: மோகன் கடைசி வரை நல்லவனாகவே வருவார். ஆனால் கிளைமாக்ஸில் தான் அவர் வில்லன்னு தெரியும். அது மட்டும் இல்லாமல் மோகனின் கேரக்டர் சாப்டானது. அதனால் அவர் மேல் நமக்கு சந்தேகம் வராது.
முதல் காட்சியிலேயே கொலை சுவரில் வைத்து பூசுவது என பரபரப்பைக் கொண்டுவந்திருப்பார் மணிவண்ணன். இது ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் இருந்தது. விஜயகாந்த் படம் என்றதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெற்றியைக் கொடுத்துவிட்டனர்.
பாடல்கள்: ஜனகராஜின் காமெடி சூப்பர். படத்தில் 3 பாடல்கள்தான். விழியிலே மணி விழியில், உலகம் முழுதும், உருகுதே இதயமே என்று. எல்லாமே அருமை. படத்தில் கோவை சரளா, ஒய்.விஜயா, தேங்காய் சீனிவாசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…