Categories: latest news throwback stories

2024ல் டாப் 10 மொக்கைப் படங்கள்… அதுலயும் ஒரே ஹீரோவுக்கு ரெண்டு படமா?

2024ல் வெளியான டாப் 10 மொக்கைப் படங்கள் பற்றிப் பார்ப்போம். இந்தப் படங்கள் பட்ஜெட், வசூல் மற்றும் ரெகவரியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 10வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்குப் போகலாமா…

இந்த வரிசையில் 10வது இடத்தில் உள்ள படம் கடைசி உலகப்போர். இந்தப் படம் கதையிலும், திரைக்கதையிலும ;கோட்டை விட்டதால் மக்கள் அதிகம் ரசிக்கவில்லை. 9வது இடத்தில் ப்ளடி பெக்கர். நெல்சன் இயக்கத்தில் கவின் நடித்த படம். இது தீபாவளி ரேஸில் அமரன் கூட விட்டாங்க. படம் மண்ணைக் கவ்வியது.

8வது இடத்தைத் தீபாவளிக்கு வெளியான பிரதர் படம் பிடித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்தது. இதுக்கு பெரிய ஹைப் இருந்தும் படம் பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை.

7வது இடத்தை விஷால் நடித்த ரத்தினம் படம் பிடித்துள்ளது. ஹரி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு வசூல் குறைவு தான். இந்த வரிசையில் 6வது இடத்தைப் பிடித்ததும் ஜெயம் ரவி படம் தான். சைரன். இதுல ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் வசூலும் குறைவு தான்.

5வது இடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினியின் லால் சலாம் பிடித்துள்ளது. இந்தப் படத்தோட ஹார்டு டிஸ்க் தொலைந்து போனது. 21 நாள் சூட் பண்ணின காட்சிகள் இடம்பெறவில்லை என்று சொன்னாங்க. படத்துக்கு 50 கோடி பட்ஜெட். இதுக்கு தியேட்ரிகல் ரைட்ஸ் 35 கோடிக்கு வாங்கிருக்காங்க. இந்தப் படத்துக்கு 48 பர்சன்ட் தான் ரெகவரியே ஆகியிருக்கு.

4வது இடத்தைத் தங்கலான் பிடித்துள்ளது. 130 கோடி பட்ஜெட். ரஞ்சித் இயக்கியுள்ளார். இது மிகப்பெரிய பிளாப் தான். இந்தப் படத்துக்கு ரெகவரி 67 பர்சன்ட் தான். 3வது இடத்தைப் பிடித்துள்ள படம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2.

250 கோடி பட்ஜெட். 60 பர்சன்ட் ரெகவரி பண்ணியது. இந்த வரிசையில் 2வது இடத்தைப் பிடித்தது ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கிய படம் வேட்டையன். 310 கோடி பட்ஜெட். இது கிட்டத்தட்ட 85 பர்சன்ட் ரெகவரி பண்ணியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் 350 கோடி பட்ஜெட்ல எடுத்த படம் கங்குவா. சூர்யா நடித்தது. இந்தப் படத்துக்கு 34 பர்சன்ட் தான் ரெகவரி. இதே தயாரிப்பாளரின் மற்றொரு படம் தான் தங்கலான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லிஸ்டில் ஒரே ஹீரோவின் 2 படம் என்று சொன்னோம் அல்லவா. அது யாருன்னா ஜெயம் ரவி தான். அந்த வகையில் 2 படங்களை ஒரே தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். அது ஞானவேல் ராஜா. ரஜினிக்கும் 2 படங்கள் லிஸ்டில் வந்தாலும் லால் சலாமில் கௌரவ வேடத்தில் தான் ரஜினி நடித்துள்ளார் என்பதால் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v