Categories: latest news throwback stories

80களில் வெளியான அர்ஜூனின் சூப்பர்ஹிட் படங்கள்…. முத்திரை பதித்த சங்கர் குரு

தமிழ்த்திரை உலகில் ‘ஆக்ஷன் கிங்’ என்றாலே அது அர்ஜூன் தான். அவர் நடிப்பில் 80களில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளியானது. என்னன்னு பார்க்கலாமா…

தாயம் ஒண்ணு

பீட்டர் செல்வகுமார் இயக்கத்தில் அர்ஜூன், நிரோஷா, பல்லவி, சீதா, ரேகா, செந்தில் உள்பட பலர் நடித்த படம் தாயம் ஒண்ணு. 1988ல் வெளியானது. இளையராஜா இசையில் பாடல்கள் அருமை. மனதிலே ஒரு பாட்டு என்ற சூப்பர்ஹிட் மெலடி பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது.

படிச்சபுள்ள

1989ல் செந்தில்நாதன் இயக்கத்தில் அர்ஜூன், சீதா, குள்ளமணி, சின்னிஜெயந்த், ராதாரவி, நிழல்கள் ரவி, எஸ்எஸ்.சந்திரன், செந்தில், காந்திமதி, கோவை சரளா உள்பட பலர் நடித்த படம் படிச்சபுள்ள. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

யார்?

1985ல் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான படம் யார். சக்தி கண்ணன் இயக்கியுள்ளார். அர்ஜூன், ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, நளினி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு திகில் படம். இந்தப் படத்துக்கு பிறகு தான் டைரக்டருக்கு யார் கண்ணன் என்ற பெயரே வந்தது. சூப்பர்ஹிட் படம்.

சங்கர் குரு

எல்.ராஜா இயக்கத்தில் அர்ஜூன், சீதா, சசிகலா, பேபிஷாலினி உள்பட பலர் நடித்துள்ள படம் சங்கர் குரு. இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்திரபோஸின் இசையில் பாடல்கள் சூப்பர். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வரும் பேபிஷாலினியின் நடிப்பு சூப்பர். இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

தாய்மேல் ஆணை

தாய்மேல் ஆணை படம் 1988ல் வெளியானது. எல்.ராஜா இயக்கியுள்ளார். அர்ஜூன், மாதுரி, ஆனந்த்ராஜ், ரகுவரன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார்.

அண்ணனுக்கு ஜே

கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் வெளியான படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். அர்ஜூன், சீதா, சார்லி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பிளாப் ஆனது.

என் தங்கை

1989ல் தான் ஏ.ஜெகநாதன் இயக்கிய என் தங்கை படமும் வெளியானது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்து இருந்தார். அர்ஜூன், கௌதமி, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v