Flash Back: 90களில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா சம்பளம்... அட இவ்ளோதானா?!

 
Flash Back: 90களில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா சம்பளம்... அட இவ்ளோதானா?!

தமிழ் சினிமா உலகில் இன்னைக்கு வர்ற படங்கள், காட்சிகள், பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மனதில் நிற்பதில்லை. இப்போது முத்த மழை பாடல் நிற்கிறது. அடுத்து இன்னொரு பாடல் வரும்போது இந்தப் பாடல் மறைந்து விடும். ஆனால் 80ஸ், 90ஸ்களில் வந்த படங்கள், பாடல்கள், காமெடி, பைட், வசனம் என எல்லாமே ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தன.

இன்னைக்கு மாதிரி அப்போ சோஷியல் மீடியாக்களும் இல்லை. மனம் தான் சோஷியல் மீடியா. இன்னைக்கு ஒரு ரிசர்ச்ல டிராவல் போகும்போதும் சரி. இரவு நேரங்களிலும் சரி. 80, 90களில் வெளியான பாடல்களைத் தான் பெரும்பாலும் ரசிக்கிறார்களாம். என்னதான் அட்வான்ஸ்சா போனாலும், டிஜிட்டல் மயமானாலும் அந்தக் கால சினிமாக்களுக்கு ஈடு இணையே இல்லை. அந்தக் காலகட்டத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளம் என்னெ;னன்னு பார்க்கலாமா...

காதல் மன்னன், ஆசை படம் எல்லாம் வரும்போது அஜித்துக்கு 5 முதல் 10 லட்சம்தான் சம்பளம். அந்தக் காலகட்டத்தில் தயாரிப்பாளர் சொல்வதைத்தான் நடிகர்கள், இயக்குனர்கள் எல்லாம் கேட்பார்கள். ஆனால் இன்று நடிகர்கள் சொல்வதைத் தான் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் கேட்கிறாங்க.

விக்ரம் சேது, காசி, தில் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அப்போது 7 முதல் 8 லட்சம் வரை சம்பளம் வாங்கினார். அடுத்ததாக சூர்யா தான் அதிக சம்பளம் வாங்கினார். அவருக்கு சினிமாவில் நுழையும்போது டான்ஸ், பைட் எல்லாம் தெரியாது. அதுக்கு அப்புறம் அவர் எல்லாவற்றையும் முறைப்படி பயிற்சி எடுத்து பழகிக் கொண்டார். 5 முதல் 6 லட்சம் வரை தான் அப்போது அவருக்கு சம்பளம்.



லவ்வர் பாய், சாக்லெட் பாய் என அழைக்கப்பட்டவர்கள் மாதவன், அப்பாஸ், பிரசாந்த். லவ் ஸ்டோரி, ஜாலியான ப்ரண்ட்ஷிப் ஃபேஸ் ஸ்டோரியாகத்தான் இருக்கும். மாதவன் அலைபாயுதே என ஹிட் படத்தைக் கொடுத்தார். 7லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் விஜய் நடித்துள்ளார். அதிகபட்சமாக 8 முதல் 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

From Around the web