Categories: latest news throwback stories

அரசியல் வேணாம்னு சொன்ன அசிஸ்டண்ட்… கேட்காத பாக்கியராஜிக்கு கிடைத்தது சரியான பாடம்!

தமிழ்சினிமாவில் குடும்பப்பாங்கான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் பிரபல இயக்குனர் வி.சேகர். இவர் பாக்கியராஜிடம் அசிஸ்டண்டாக வேலை பார்த்தபோது நடந்த சில சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

ராமராஜன் அசிஸ்டண்ட்: பாக்கியராஜ் சாருக்கிட்ட அசிஸ்டண்ட்டா சேர்ந்தேன். சினிமா அசிஸ்டண்ட் எல்லாம் எங்கேயாவது ஒண்ணா சேருவோம். பாக்கியராஜ் அசிஸ்டண்ட், கங்கை அமரன் அசிஸ்டண்ட், பாரதிராஜா அசிஸ்டண்ட் அப்படின்னு. அந்தவகையில ராமராஜன் அசிஸ்டண்ட் எங்கிட்ட கேட்டாரு. ‘நீங்க பாக்கியராஜிக்கிட்ட அசிஸ்டண்டா இருக்கீங்களா? என்ன பாக்கியராஜ் இப்படி பண்றாரு?’ன்னு கேட்டாரு.

ராமராஜன் CM: ‘அவரு என்ன பண்ணினா உங்களுக்கு என்னங்க?;ன்னு கேட்டேன். ‘அவரு ஏதோ அரசியலுக்கு வரப்போறாராமே..’ன்னாரு. ‘அவரு அரசியலுக்கு வந்தா உங்களுக்கு என்ன?;ன்னு கேட்டேன். ‘இல்ல. எங்களுக்கு ராமராஜன் கட்சி ஆரம்பிக்கிறதா முடிவு பண்ணிட்டாரு. அவருக்கு செல்வாக்குக் கீழே எல்லாம் இருக்கு. அவரு கண்டிப்பா சிஎம் ஆகுறது நிச்சயம்…

ரஜினிக்கு அரசியல் ஆசை: அவரு பாக்கியராஜ் எல்லாம் எல்லாம் நின்னாருன்னா காலி பண்ணிடுவாரு’ன்னாரு. அப்புறம் டி.ராஜேந்தர் அசிஸ்டண்ட் வந்தாரு. ‘இல்ல இல்ல. நம்ம தலைவர் ரெடியா ஆகிட்டாரு..’ன்னாரு. அப்புறம் ரஜினிக்கு அரசியல் ஆசைன்னு பேப்பர்ல செய்தி வருது. விஜயகாந்து அரசியலுக்கு வாராருன்னாங்க. அதுல விஜயகாந்த் அடிச்சித் தூக்கிட்டு வர்றாரு.

பாக்கியராஜ் கட்சி: ரசிகர்களை எல்லாம் பிரமாதமா வச்சிருக்காரு. எம்ஜிஆரு மாதிரி எல்லாரும் வர முடியாது. அவரு சின்னவயசுல இருந்தே நாடகங்கள் நடிச்சாரு. படங்கள்ல தன்னோட கருத்தைச் சொன்னாரு. அதனால அவரை மாதிரி வேற யாரும் வர முடியாது. இந்த நேரத்துல பாக்கியராஜ் கட்சி ஆரம்பிச்சிட்டாரு. நான் அவருக்கிட்ட ‘நீங்க சினிமாவுலயே போலாமே…’ன்னு கேட்டேன். ‘இல்ல. எம்ஜிஆருக்கு வாரிசு இல்ல. ஜெயலலிதா வர்றது கூட எம்ஜிஆருக்குப் பிடிக்கலயாம். அதனால நான் வரணும்’னாரு. இப்படி அவங்களோட பேச்சு போய்க்கிட்டே இருந்தது.

சரியான பாடம்: வி.சேகர் எவ்வளவோ சொல்லியும் பாக்கியராஜ் கேட்காமல் கட்சி ஆரம்பிச்சாராம். 6 மாசம் ஆச்சு. நிறைய செலவு பண்ணினாரு. ஒரு கட்டத்துல ‘தலைவரே நம்ம கட்சி ஆள வெட்டிட்டான்’னு ஒருத்தர் சொன்னாரு. ஒரு கட்டத்துல கட்சியைக் கலைச்சிட்டாரு. கடைசியில வி.சேகரிடம், ‘யோவ் நீ சொன்னது சரிதான்யா. அரசியல்னா தைரியம், வீரம், அடிதடி அந்தமாதிரி எல்லாம் வேணும். நமக்கு இதெல்லாம் வேணாம்..’னாராம் பாக்கியராஜ்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v