Categories: latest news throwback stories

எனக்கு சரியான எதிரின்னா இளையராஜாதான்… வைரமுத்துவே சொன்னாராமே!

வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் சிறந்த குணச்சித்திர நடிகர், இயக்குனரும் கூட . இவர் பிரபல சன்டிவி சீரியல் எதிர்நீச்சலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் வைரமுத்து உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு இசை அமைப்பாளரை முழுக்க சார்ந்து இருக்குறவன் பாடல் எழுதுற கவிஞர்தான். இயக்குனரும் கிடையாது. தயாரிப்பாளரும் கிடையாது. அப்படிப்பட்ட கவிஞரை இளையராஜா மடியில் உட்கார வைத்து சோறு ஊட்டினாராம்;. அதே நேரம் டப்புன்ன உதைச்சித் தள்ளியும் விட்டாராம். அவர்தான் கவிஞர் வைரமுத்து.

அந்த நேரத்துல அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாது. ஆனாலும் அதை ஒரு சேலஞ்சா எடுத்து முன்னேறியவர்தான் வைரமுத்து. அவர் ஏ.ஆர்.ரகுமான் என்ட்ரி வரை போராடி ஜெயித்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளராக அறிமுகமான படம் ‘ரோஜா’. அப்போது ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை வைரமுத்துதான் எழுதினார்.

சிகரம் படத்திலும் வைரமுத்து தான் எழுதினார். ‘கடலோரக்கவிதைகள்’ தான் இளையராஜாவுடன் இருந்து வைரமுத்து பணியாற்றிய கடைசி படம். எனக்குத் தெரிஞ்சி ‘புன்னகை மன்னன்’ அல்லது ‘மாவீரன்’ தான் சாங் ரெக்கார்டிங்ல கடைசி படமாக இருக்கும் என்கிறார் மாரிமுத்து. மாவீரனில் வரும் ‘நீ கொடுத்ததை’ பாடலை எழுதியவர் வைரமுத்துதான்.

ஒருமுறை பிரபல வார இதழில் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்’ என்ற தொடரை எழுதினார் வைரமுத்து. எல்லாரும் இளையராஜாவை அதுல எழுதலையான்னு கேட்டாங்களாம். ஆனா இதுல இளையராஜா பேருதான் முதல்ல வரணும்னு வைரமுத்து சொன்னாராம். அதுல சிவாஜி கணேசனையும் எழுதினார்.

அதே நேரம் 15வது தொடரில் இளையராஜாவை எழுத முடிவு செய்தார். அப்போது கடந்த 15 வருடங்களாக தமிழ்நாட்டுக் காற்று உன் குத்தகையிலேயே இருக்கிறது என்று எழுதினார். அப்படி அவர் சொல்லிக்கிட்டு இருக்கும்போது எங்கேயோ ஒரு இடத்துல நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்திங்கற பாட்டு ஒலிக்குது.

டப்புன்னு நோட்டைத் தூக்கி எறிஞ்சிட்டாராம். அவனை யாராலயும் அழிக்கவே முடியாது. அவன் பெரிய ஆளுய்யா. எனக்கு சரியான எதிரின்னா அவன் மட்டும்தான்யான்னு சொல்லி அப்படியே ஒரு மாதிரி நடுங்கிட்டாராம் வைரமுத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், ஜெய்லர், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2023ல் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v