Categories: latest news throwback stories

மயில்சாமிக்கு பணம் வந்தா இதத்தான் செய்வாரு!.. விஜயகாந்தையே ஓவர் டேக் பண்ணுவார் போல!…

Mayilsamy: தமிழ் திரையுலகில் இருந்த சிலர் மட்டுமே பலருக்கும் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். 60களில் இதை செய்தவர்கள் எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கிருஷ்ணனும்தான். அப்போது பலரும் தங்களுக்கு பணப்பிரச்சனை எனில் என்.எஸ்.கிருஷ்ணண் வீட்டுக்கே போவர்கள். அவருக்கு பின் எம்.ஜி.ஆர் அந்த இடத்தில் இருந்தார்.

எம்.ஜி.ஆர்: எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்கு போனால் உதவி கிடைக்கும் என பலரும் நம்பினார்கள். எனவே, தினமும் எம்.ஜி.ஆரின் வீட்டில் பலரும் நிற்பார்கள். அதில் பலருக்கும் எம்.ஜி.ஆர் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். பெரும்பாலும் திருமண செலவு, மருத்துவ சிகிச்சை, சொந்த தொழில் செய்ய பணம் ஆகியவைக்காகவே மக்கள் அவரிடம் உதவி கேட்டார்கள்.

விஜயகாந்த்: எம்.ஜி.ஆருக்கு பின் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். அவரும் பலருக்கும் உதவி செய்திருக்கிறார்கள். பணமாக பலருக்கும் உதவியிருந்தாலும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க பலருக்கும் உதவியிருக்கிறார். சரத்குமார், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களையும், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் உருவாக்கியிருக்கிறார்.

அதேபோல், சரியான வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்ட காமெடி நடிகர்களுக்கு மறைந்த நடிகர் மயில்சாமி உதவியிருக்கிறார். மயில்சாமியை நம்பி பல காமெடி நடிகர்களின் குடும்பம் பிழைத்தது என்றே சொல்லலாம். அதனால்தான் அவர் மரணமடைந்த போது பலரும் கண்ணீர்விட்டார்கள்.

மயில்சாமி: இந்நிலையில், காமெடி நடிகர் பெஞ்சமின் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘மயில்சாமி வெளிநாடுகளுக்கு போய் மிமிக்ரி நிகழ்ச்சி செய்வார். ஒரு நிகழ்ச்சிக்கு அவருக்கு ஒரு லட்சம் கொடுப்பாங்க. சென்னை வந்த உடனே வீட்டுக்கு போகமா எனக்கு போன் பண்ணி பைக் எடுத்துட்டு வர சொல்லுவாரு. மசூதி தெருவுக்கு போய் அங்கு வசிக்கும் ஒவ்வொரு ஜூனியர் ஆர்டிஸ்ட் வீட்டுக்கும் 3 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம்னு எல்லோருக்கும் பிரிச்சி கொடுப்பாரு.

அவரின் வீட்டுக்கும் உதவி கேட்டு போவாங்க. அவரோட செக் புக் என்கிட்டதான் இருக்கும். வர எல்லோருக்கும் 5 ஆயிரம், 10 ஆயிரம்னு கொடுக்க சொல்லுவாரு. அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதுல அவர் அற்புதமான மனிதர்’ என பேசியிருக்கிறார்.

Published by
சிவா