உங்க படமே வேண்டாம்!. மணி சாரிடம் கடுப்பான அந்த நடிகர்.. அவரு பயங்கரமானவர் ஆச்சே!...

 
உங்க படமே வேண்டாம்!. மணி சாரிடம் கடுப்பான அந்த நடிகர்.. அவரு பயங்கரமானவர் ஆச்சே!...

Manirathnam: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். மௌன ராகம், ரோஜா, அஞ்சலி, பம்பாய், நாயகன் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு புது மாதிரியான உணர்வுகளை கொடுத்தது. இந்த படங்களை பார்த்து இயக்குனராக வேண்டும் என சிலர் சினிமாவுக்கு வந்தார்கள். இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கு முன்னோடி அவர்.

இவர் இயக்கும் படங்களில் பல நுட்பமான விஷயங்கள் இருக்கும். வசனங்களை நம்பாமல் காட்சி வழியாக உணர்வுகளை கடத்தும் இயக்குனர் இவர். அதனால்தான் இவரை இயக்குனர்களே மணி சார் என அழைக்கிறார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் வரிசையில் மணிரத்னம் கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக இருக்கிறார்.

இவர் எடுத்தது போல் காதல் படங்களை யாரும் இதுவரை எடுத்தது இல்லை. இதயத்தை திருடாதே, உயிரே, அலைபாயுதே, ஓகே கண்மணி போன்ற படங்களை பார்த்தால் அது புரியும். அதேபோல், ரோஜா படத்தில் தீவிரவாதத்தையும், பம்பாய் படத்தில் மத வேறுபாடுகளையும் அப்பட்டமாக காட்டியிருந்தார்.

உங்க படமே வேண்டாம்!. மணி சாரிடம் கடுப்பான அந்த நடிகர்.. அவரு பயங்கரமானவர் ஆச்சே!...

இவரின் இயக்கத்தில் நடிக்க எல்லா நடிகர்களுமே ஆசைப்படுவார்கள். ஆனால், இவரின் இயக்கத்தில் நடிக்க விருப்பமில்லை என சொன்ன ஒரு நடிகரை பற்றி பார்ப்போம். அவர்தான் நடிகர் ராதாரவி. ஊடகம் ஒன்றில் பேசியப்போது ‘மணிரத்னம் என்னை 2 படங்களில் நடிக்க அழைத்தார். தளபதி படத்தில் வில்லனாக நடிக்க என்னை அழைத்தார்.

படத்திற்காக நீங்கள் மொட்டை போட வேண்டும் என்றார். நான் ஒரு சம்பளம் சொன்னேன். அவரோ மிகவும் குறைவான சம்பளம் கொடுப்பதாக சொன்னார். ‘சாரி சார். என்னால் முடியாது’ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அதேபோல், திருடா திருடா படத்தில் மலேசியா வாசுதேவன் நடித்த வேடத்தில் என்னை நடிக்க அழைத்தார். உங்கள் அப்பா எம்.ஆர்.ராதாவை மனதில் வைத்துதான் இந்த வேடத்தை எழுதியிருக்கிறேன் என்றார். அதிலும் அவர் சொன்ன சம்பளம் மிகவும் குறைவு. எனவே நடிக்க மறுத்துவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

From Around the web