latest news
எம்.ஆர்.ராதாவுக்கு 5 பொண்டாட்டினு சொல்றான்!.. ஆனா அதுக்கும் மேல!.. ராதாரவி ஓப்பன் பேட்டி!..
Published on
By
MR Radha: நாடகங்களில் பல புரட்சிகரமான கருத்துக்களை சொன்னவர் எம்.ஆர்.ராதா. கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியாரை பின்பற்றியவர். திராவிட கழத்தில் பற்று கொண்டிருந்தார். பெரியார் என்னவெல்லாம் சொன்னாரோ அதையெல்லாம் தனது நாடகங்களில் காட்சிகளாக காட்டியவர். கடவுளை எம்.ஆர்.ராதா விமர்சித்தது போல இதுவரை யாரும் விமர்சித்திருக்க மாட்டர்கள்.
பெரியார் கடவுளை நாகரீகமாக திட்டினார் என்றால் எம்.ஆர்.ராதா தனது நாடகளில் கடவுளையும், கடவுளை வணங்கும் நபர்களையும் எல்லை தாண்டி கிண்டலடிப்பார். அவர் நடிப்பில் வெளியான இரத்தக் கண்ணீர் திரைப்படம் கூட முதலில் நாடகமாக உருவானதுதான். பல நூறு முறை அந்த நாடகத்தில் நடித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.
எம்.ஆர்.ராதா வெளிநாட்டின் வளர்ச்சியை இந்தியாவோடு ஒப்பிட்டு அடிக்கடி பேசுவார். நாமெல்லாம் இன்னமும் வளரவே இல்லை. நம்மிடம் அறிவே இல்லை என பல படங்களில் நக்கலாக பேசியிருக்கிறார். இரத்தக்கண்ணீர் படத்திலேயே இது போல பல காட்சிகள் இருக்கும். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல வேடங்கள் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் பல படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் கலக்கி இருக்கிறார். 60களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்தார் அவர். கோபம் வந்தால் உடனே துப்பாக்கியை எடுத்து சுட வேண்டும் என நினைப்பார். அப்படித்தான் எம்.ஜி.ஆரை சுட்டு சிறைக்கு சென்றார்.
சொந்த வாழ்வில் பல பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டார். இவரின் வாரிசுகளில் ராதாரவி, ராதிகா, நிரோஷா, எம்.ஆர்.வாசு என பலரும் சினிமாவில் இருக்கிறார்கள். எம்.ஆர்.ராதா பற்றிய யுடியூப் சேனல்களில் பலரும் பல செய்திகளை சொல்வதுண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி ‘என் அப்பா எம்.ஆர்.ராதா 5 பொண்டாட்டி கட்டி கெத்தா வாழ்ந்தாருன்னு ஒரு யுடியுப் சேனலில் போட்ருக்கான். அவனுக்கு தெரியாது. 5 பொண்டாட்டிலாம் குறைச்சல்.. இன்னும் நிறைய இருக்கு’ என ஓப்பனாக சொல்லியிருக்கிறார்.
அதேபோல், என் அப்பா எந்த பெண் மீது ஆசைப்பட்டாலும் அவரை திருமணம் செய்துகொள்வதோடு சொத்தையும் எழுதி வைத்திருக்கிறார். அவர் யாரையும் ஏமாற்றியது இல்லை’ என சொல்லியிருக்கிறார்.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....