Categories: latest news throwback stories

விஜய் என்ன வரது?.. நானே அங்க வரேன்.. சூப்பர்ஸ்டார் ரஜினி செய்த காரியம்!….

Rajini Vijay: தமிழ் சினிமா மட்டுமல்ல. இந்திய சினிமா உலகமே சூப்பர்ஸ்டார் என அழைக்கும் நடிகராக ரஜினி இருக்கிறார். நடிகர்களே அவரை ’தலைவர்’ என அழைக்கிறார்கள். 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இப்போது 72 வயது ஆன போதும் ஆக்டிவாக நடித்து வருகிறார். கூலி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் அவர் ஆடிய நடனம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களுக்கு மட்டும்மல்ல.. நடிகர்களுக்கும் பிடித்த நடிகராக ரஜினி இருக்கிறார். அதுதான் அவர் இத்தனை வருடங்களாக சாதித்த பெருமை. ரஜினி சார் படத்தோடு நான் மோத மாட்டேன் என சொல்லி தனது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் சூர்யா. இப்போதைய தலைமுறை நடிகர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கிறார் ரஜினி.

சினிமாவில்தான் ரஜினி மாஸ் நடிகர். நிஜவாழ்வில் அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர். அதற்கு காரணம் அவருக்குள் இருக்கும் ஆன்மீகம். அவரின் ஆன்மீகமே அவரை எளிமைக்கு வழிநடத்துகிறது. கடந்த 40 வருடங்களாகவே அவர் அப்படித்தான் இருக்கிறார். வெளியூருக்கு ஷூட்டிங் போய் அங்கே ஹோட்டலில் தங்க அறை கிடைக்கவில்லை எனில் காரிலேயே தூங்கியிருக்கிறார்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சீக்கிரம் போய்விட்டால் ஒரு துண்டை விரித்து அப்படியே கீழே படுத்துவிடுவார். மற்ற நடிகர்களை போல கேரவானிலேயே ரஜினி இருக்கமாட்டார். ஒரு மரத்தடியில் ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருப்பார். ரஜினி போல மிகவும் எளிமையான ஒரு நடிகரை படப்பிடிப்பில் பார்க்கவே முடியாது.

ரஜினி பார்த்து வளர்ந்தவர்தான் நடிகர் விஜய். விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் சிறுவனாக விஜய் நடித்திருக்கிறார். விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகராக இப்போதும் ரஜினி இருக்கிறார். அதனால்தான் சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் ஒரு விழாவில் பேசினார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம் பகவதி. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகிலேயே ரஜினியின் பாபா பட ஷூட்டிங் நடந்தது. ரஜினி அருகில் இருப்பதை கேள்விப்பட்ட விஜய் ‘நான் போய் ரஜினி சாரை பார்த்துவிட்டு வருகிறேன்’ என இயக்குனரிடம் சொல்லி கிளம்பிக்கொண்டிருந்த போதே ரஜினியே அங்கே வந்துவிட்டாராம். சிறிது நேரம் விஜய் மற்றும் இயக்குனரிடம் பேசிவிட்டு சென்றிருக்கிறார். தன்னை விட சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் ரஜினி அங்கே சென்றது அவரின் பெருந்தன்மையையும், எளிமையும் காட்டுகிறது.

Published by
சிவா