Categories: latest news throwback stories

சோகத்துடன் கல்யாணப் பத்திரிகை கொண்டு வந்த செந்தில்… தயாரிப்பாளர் கொடுத்த உற்சாகம்!

தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை இரட்டையர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில்தான். இவர்களில் செந்தில் எப்படி எல்லாம் திரையுலகில் வளர்ந்து வந்தார்? அவருக்குக் கல்யாணம் யார் தலைமையில் நடந்ததுன்னு பார்க்கலாமா…

செந்திலுக்கு தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்ற படத்தில் கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 500 ரூபாய் தான். அப்புறம் 10 வருஷம் கழிச்சி விஷ்ணு படத்தில் 10 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளரும், இயக்குனருமான எம்.பாஸ்கர். அந்த அளவுக்கு அவரது வளர்ச்சி அபாரமாக இருந்தது. இதுகுறித்து அவரது மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

தீர்ப்புகள் திருத்தப்படலாம் படத்தில் சத்யராஜை வேண்டா வெறுப்புடன்தான் நடிக்க சம்மதிச்சாரு. அப்போ ஒரு நாளைக்கு சத்யராஜிக்கு 500 ரூபாய் சம்பளம். 2 நாளைக்கு 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது. மிக உயரமாக இருந்ததால் சத்யராஜை பிரேமுக்குள் கொண்டு வரமுடியாது என்று நினைத்தார் அப்பா. சிவகுமார் சொன்னதற்காக படத்தில் நடிக்க வைத்தார்.

vishnu, panneer nathigal

தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பௌர்ணமி அலைகள் படங்களில் செந்தில் நடித்தார். அப்புறம் பன்னீர் நதிகள் படத்துல நடிக்கும்போது செந்தில் சார் கோவை சரளா, சிவகுமார், மீனா, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோருடன் படத்துல நடித்தார். தீர்ப்புகள் திருத்தப்படலாம் படத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி செந்தில் கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்துருக்காரு.

அப்போ அப்பா ‘என்னடா கல்யாணம்னு சொல்றே. ஏன் முகத்தை டல்லா வச்சிருக்குறே?’ன்னாரு. ‘யாருமே கல்யாணத்துக்கு தலைமை தாங்க வர மாட்டேங்குறாங்க. நடிகன்னு வேற சொல்ற..?’ன்னு கேட்பாங்க. அப்படின்னு சோகமா சொல்லிருக்காரு.

‘என்னடா இப்படி சொல்றே? நான் வந்து உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்டா. நான் வந்தா ஓகே தானடா’ன்னு கேட்டுருக்காரு. ‘ரொம்ப சந்தோஷம். இதுக்கு மேல என்ன இருக்கு…!’ன்னு கேட்ட செந்தில், ‘நான் வேணா உங்களுக்கு பிளைட்ல டிக்கெட் போடவா…’ன்னு கேட்டாராம். ‘இல்லடா காருல வந்துடறேன். எந்த இடம்னு சொல்லு’ன்னு சொல்லிட்டாரு.

அப்போ அப்பா ரெண்டு மூணு ப்ரண்ட்ஸைக் கூட்டிட்டுப் போய் செந்தில் சாருக்கு தாலியை எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வச்சாரு. அந்த நன்றி விஸ்வாசம் செந்திலுக்குக் கடைசி வரை இருந்தது. விஷ்ணு படத்துல வடிவேலு கால்ஷீட்ல சொதப்பும்போது அவரை நீக்கியதும் செந்தில் தான் நடிச்சிக் கொடுத்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v