Connect with us

latest news

விக்ரமின் நிலைமையை பார்த்து விவேக் செய்த உதவி.. ‘சேது’ சமயத்தில் இப்படியெல்லாம் நடந்ததா?

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். கலைமாமணி போன்ற பல விருதுகளை பெற்றவர் விவேக். இவருடைய மறைவு திரை உலகிற்கு மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாக இருந்தது. அப்துல் கலாமின் நீண்ட நாள் கனவாகிய மரம் நடுதலை இவர் தொடர்ந்து வந்தார். ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது இவருடைய ஆசை. அதை மிகச் சிறப்பாக செய்து வந்தார் விவேக்.

இப்போது இந்த பணியை அவருடைய உதவியாளரும் நடிகருமான முருகன் செய்து வருகிறார். நகைச்சுவையில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்தவர் விவேக் .திரை உலகில் பல பேருக்கு இவரால் ஆன உதவிகளை செய்திருக்கிறார் விவேக் .இவருடைய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. நடிகர் விக்ரமும் விவேக்கும் நெருங்கிய நண்பர்கள். இவரை கெனி என்று விக்ரமின் இயற்பெயர் சொல்லித்தான் அழைப்பாராம் விவேக்.

ஒரு சமயம் பாளையத்தம்மன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த பொழுது அந்த படம் அப்போது பிலிம் சிட்டியில் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். விவேக் தன்னுடைய ஷாட் முடிந்ததும் திரும்பி பார்க்கும் பொழுது தொலைவிலிருந்து ஒருவர் இந்த ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டே இருப்பதை விவேக் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு ஷாட் இடைவெளியின் போதும் இந்த மாதிரி நடந்திருக்கிறது. அதன்பிறகு தான் கிட்ட போய் பார்த்தால் அது விக்ரம் என விவேக் கூறினார்.

அப்போது விக்ரமிடம் நீண்ட நேரமாக இங்கு நிற்கிறாயே என்ன ஆச்சு? என கேட்டிருக்கிறார் விவேக் .அதற்கு விக்ரம் இங்குதான் சேது படத்தின் சூட்டிங் நடப்பதாக சொன்னார்கள். ஆனால் யாரையும் காணோம். அந்தப் படத்தின் சூட்டிங்கை நிறுத்தி நிறுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என விக்ரம் கூறினாராம். இதைப் பற்றி விவேக் கூறும்போது சேது படத்தால் விக்ரம் பெரிதளவு போராட்டங்களை சந்தித்தார். அந்த நேரத்தில் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கொண்டது. இதில் நான் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். நீ சரி என சொன்னால் இன்னொரு கேரக்டரில் உன்னை நடிக்க தயாரிப்பாளரிடம் நான் பேசுகிறேன் என விக்ரமிடம் கேட்டிருக்கிறார் விவேக். ஆனால் விக்ரமோ சேது படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது .இந்த படத்தில் நான் நடித்து அந்த படம் வெளி வந்தால் ஒரு ஹீரோவாக மக்கள் என்னை பெரிதளவில் கொண்டாடுவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு கதை. அதனால் இந்த படத்தை விட்டு நான் இப்போதைக்கு வேறு எந்த படத்திலும் கமிட்டாக விரும்பவில்லை என கூறி மறுத்துவிட்டாராம் விக்ரம். ஆனால் விவேக் பலமுறை விக்ரமிடம் இதைப் பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் சேது படத்தை முழுவதுமாக நம்பி இருந்தாராம் விக்ரம் அவர் சொன்னதைப் போல அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இன்று ஒரு சியான் விக்ரம் அவரை கொண்டாடி வருகிறோம் என விவேக் அந்த பேட்டியில் கூறினார்

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top