Categories: latest news throwback stories

பாலசந்தர் சொன்னது வேற.. ஸ்ரீதேவி சொன்னது வேற! விழுந்து விழுந்து சிரித்த கமல்

சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி: 1967 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. எண்பதுகள் காலகட்டத்தில் இவர்தான் அனைவருக்குமான ஸ்ரீ தேவியாக இருந்தார். தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். தமிழ் மட்டுமல்ல ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாகவே திகழ்ந்தார்.

ரஜினியை பழிவாங்க: ரஜினி கமல் இவர்களின் ஆஸ்தான நடிகையே ஸ்ரீதேவி தான். இருவருடனும் சேர்ந்து கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். தமிழில் முதன் முதலில் இவர் ஹீரோயினாக அறிமுகமானது மூன்று முடிச்சு திரைப்படத்தில் தான். அந்த படத்தில் ரஜினி வில்லனாக நடித்திருப்பார். அவரை பழி வாங்கும் எண்ணத்தில் ரஜினியின் அப்பாவையே திருமணம் செய்து கொள்வார் ஸ்ரீதேவி.

மூக்குத்தி பிரபலம்: அந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 13 வயது தான். அது மட்டுமல்ல இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான நடிகையும் கூட. இவர் ஹீரோயினாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி மூக்குத்தி என்பது மிகவும் பிரபலமானது. ஏனெனில் படத்தில் இவர் மூக்குத்தி இல்லாமல் நடித்ததே கிடையாது. அந்த அளவுக்கு இவருக்கு மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கும் .

அந்த ஒரு காட்சி: குடும்ப பாங்கான ஒரு முகம், கவர்ச்சி இல்லாத தோற்றம் என அனைவரையுமே வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் மூன்று முடிச்சு படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை ஒரு பழைய பேட்டியில் கூறி இருக்கிறார் ஸ்ரீதேவி. அந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சி. ரஜினி போட் ஒட்டிக்கொண்டு வருவார். கமலும் ஸ்ரீதேவியும் அதில் உட்கார்ந்து இருப்பார்கள்.

திடீரென கமலை போட்டில் இருந்து தண்ணீருக்குள் தள்ளிவிடுவார் ரஜினி. அதன் பிறகு கோபத்தில் வேகமாக போட்டை ஓட்டுவது மாதிரியான காட்சி. கமல் விழுந்ததும் ஸ்ரீதேவி ஐயோ போயிட்டாரே போயிட்டாரே என கத்த வேண்டும். ஆனால் ஸ்ரீதேவி கமல் விழுந்ததும் ஐயோ பூட்டாரே, பூட்டாரே என சென்னை பாஷையில் கத்தி இருக்கிறார். உடனே போட்டை பிடித்து கீழே தூங்கிக் கொண்டிருந்த கமல் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

இதனால் அந்த போட் ஆடியதாம். இது லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. தூரத்தில் இருந்த பாலச்சந்தர் ஐயோ ஏன் போட் ஆடுகிறது என கத்தினாராம். இதை சொல்லும் போதே ஸ்ரீதேவி மிகவும் சிரித்தபடி கூறினார். அரங்கமே சிரிப்பலையில் நனைந்தது. இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன என ஸ்ரீதேவி கூறி இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்