Connect with us

latest news

Flash back: முதல் நாள் படப்பிடிப்பு… சட்டையைப் பிடிச்ச விஜயகாந்த்… நடிகர் தகவல்!

50க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனர். பின்னணி குரல் கலைஞர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர் அண்ணாத்துரை கண்ணதாசன். இவர் கவியரசர் கண்ணதாசனின் மகன். இவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது சினிமா உலக அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

தேவராஜ் மோகன், ராபர்ட் ராஜசேகரன், கேயார் ஆகிய இயக்குனர்களின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். கேயார் எங்கிட்ட ஒரு நாள் நான் மீட்டிங் போறேன். நீ சூட்டிங் ஆரம்பி. நான் இடையில வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்னு சொன்னார். நான் விக் மட்டும் கொஞ்சம் பார்த்துக்கறேன்னு சொன்னேன்.

பார்த்துக்கலாம்னு சொல்லிட்டுப் போயிட்டார். அது விஜயகாந்த் படம். கொஞ்சநேரத்துல நீக்ரோஸ் வச்சிருக்குற மாதிரி பெரிய விக்கை வச்சிட்டு நடந்துட்டு வர்றாரு. ஏன் சார் இப்போ வந்தீங்கன்னு கேட்டேன். அந்த காஸ்டியூமர்தான் போய் காட்டிட்டு வந்துருன்னு சொன்னாரு. அப்புறம் விக்கை மாத்திட்டோம். ரொம்ப இன்னோசென்ட். நான் பார்த்த நடிகர்லயே எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு. சொல்றதைக் கேட்டுக்குவாரு.

விஜயகாந்த் எங்கிட்ட முதல் அறிமுகமே எங்கிட்ட வந்து என் சட்டைக் காலரை இரண்டையும் ப்ரண்ட்லியாகப் பிடித்துக் கொண்டு ‘அண்ணாத்துரை சார் எந்த வருஷம் பிறந்தீங்கன்னு சொல்லுங்க’ன்னாரு. நான் வருஷத்தைச் சொன்னேன். என்னை விட சீனியர்னு நினைச்சிக்கிட்டு அப்படிக் கேட்டாரு.

சொன்னதும் ‘ஏய் போடா. போய் வேலையைப் பாரு’ன்னு சொல்லிட்டாரு. ஏன்னா நான் நாலஞ்சு வயசு சின்னவன். ரொம்ப தங்கமான கேரக்டர் விஜயகாந்த். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேயார் விஜயகாந்தை வைத்து அலெக்சாண்டர், தர்மா ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்சாண்டர் 96லும், தர்மா 98லும் ரிலீஸ் ஆனது. இவற்றில் அலெக்ஸாண்டர் படத்தின்போது தான் அண்ணாத்துரை கண்ணதாசன் சொன்ன நிகழ்வு நடந்து இருக்கலாம் என தெரிகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top