Categories: latest news throwback stories

இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடல்… ஏஆர்.ரகுமானா, கொக்கா? என்ன படம்னு தெரியுமா?

தலைப்பைப் படித்ததுமே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. அது உண்மைதான். இசைப்புயல் என்று தமிழ்த்திரை உலகில் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகனும்கூட.

இவர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில்தான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படமே முத்தாய்ப்பாக இருந்தது. அந்த இசை தமிழ்த்திரை உலகுக்கு புத்துணர்வைத் தந்தது.

இளம் ரசிகர்களிடையே புது ரத்தத்தைப் பாய்ச்சியது போல இருந்தது. புது வெள்ளை மழை என்று வரும் அந்தப் பாடல் ஆகட்டும், சின்ன சின்ன ஆசை பாடல் ஆகட்டும். இசையில் புதுப்பரிமாணத்தை நாம் உணரலாம்.

தேவர் மகன் – ரோஜா: இளையராஜாவுடன் கடும் போட்டியாக இருந்தது. அப்போது இளையராஜாவுக்கு தேவர் மகன் படம் வந்தது. தேவர்மகனுக்கும், ரோஜாவுக்கும் கடும் போட்டி. கடைசியில் பெரும் வரவேற்பைப் பெற்றது ரோஜா பாடல்.

இசைக்கருவி இல்லாமல்: மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் காம்போ என்றால் அது சூப்பர் டூப்பர்ஹிட் தான் என்றாகி விட்டது. அந்த வகையில் இருவரும் இணைய வெளியான படம் தான் திருடா திருடா. இந்தப் படத்தில் தான் எந்த விதமான இசைக்கருவிகளும் இல்லாமல் ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் கம்போசிங் செய்தார்.

ராசாத்தி…: அதுதான் படத்தின் சிறந்த பாடல். பிரசாந்த், ஹீரா நடித்து சூப்பர்ஹிட்டானது இந்தப் படம். அது என்ன பாடல்னு தானே கேட்கிறீர்கள்? ‘ராசாத்தி என் உசுரு என்னதில்ல’ என்ற அந்த சூப்பர்ஹிட் மெலடி காதல் பாடல்தான். இப்போது கேட்டாலும் அப்படியே சொக்கிப் போய் விடுவீர்கள்.

கோரஸ்: இந்தப் பாடலைப் பாடியவர் சாகுல் ஹமீது. இந்தப் பாடலை எப்படி இசைக்கருவிகளே இல்லாமல் ரகுமான் சாத்தியமாக்கினார் என்று கேள்வி எழலாம். இசைக்கருவிகளே இல்லாவிட்டாலும் இன்னொரு உத்தியைக் கையாண்டு இருந்தார் ரகுமான். அதுதான் அகபெல்லா எனப்படும் கோரஸ்.

பாடல் முழுவதும் இசைக்குரிய பலத்தைத் தரும் இந்தக் கோரஸ். பாடலை ரசித்துக் கேட்கும் இசைப்பிரியர்கள் யாராக இருந்தாலும் அந்த கோரஸ் உடன் இணைந்து ஹம்மிங் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v