Categories: latest news throwback stories

Flash Back: முந்தானை முடிச்சு படத்தை ஹிட் அடிக்க வைத்த அந்த சென்டிமென்ட்! தயாரிப்பாளர் நின்னு சாதிச்சிட்டாரே!

சினிமா உலகில் சென்டிமென்டுக்கு எல்லாரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். முந்தானை முடிச்சு குறிப்பிட்ட பெரிய வெற்றிப்படம். அந்தப் படத்துக்கு முதலில் பாக்கியராஜ் பரிந்துரைத்தது சின்ன வீடு. இந்தப் படத்தின் பெயர் ஏவிஎம்.சரவணனுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தப் பேரை மாற்றலாமான்னு பாக்கியராஜிடம் கேட்டுள்ளார்.

அதற்கு என்னுடைய சொந்தப்படத்துக்காக முந்தானை முடிச்சுன்னு டைட்டில் வச்சிருக்கேன். அதை வேணா மாத்திக்கோங்கன்னு சொன்னார் பாக்கியராஜ். முந்தானை முடிச்சு படத்தைப் பொருத்தவரைக்கும் 8 எழுத்தில் டைட்டில் வரும். 8 எழுத்திலே பேரு இருந்தால் விநியோகஸ்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற சந்தேகம் ஏவிஎம்.சரவணனுக்கு இருந்தது.

அப்போ தான் ஏவிஎம் சரவணனிடம் விளம்பரப்பிரிவில் இருந்த அர்ஜூன் ஒரு யோசனையை சொன்னார். முந்தானை முடிச்சுல 2 ‘மு’ இருக்கு. அதனால ஒரு ‘மு’வை பெருசாப் போட்டு அதுலயே முந்தானை, முடிச்சை சமமாகப் பங்கிட்டால் எட்டு எழுத்து வராது.

ஏழு எழுத்துதான் வரும் என்றார். அவர் சொன்ன அந்த யோசனை ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அந்த டைட்டிலை வித்தியாசமாக அப்படி வடிவமைத்தார். அந்தவகையில் முந்தானை முடிச்சு என்ன ஓட்டம் ஓடியது என்பது தெரிந்த விஷயம்தானே.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v