Categories: latest news throwback stories

Flash Back: பாலசந்தர் கண்ணதாசனுக்கு விட்ட சவால்… மேடையிலேயே பாடல் உருவான அதிசயம்!

1976ல் ஒரு சினிமா பத்திரிகை விருது வழங்கும் விழா நடக்கிறது. அந்த நிகழ்விலேயே கண்ணதாசனின் பிறந்தநாள் சிறப்பையும் சேர்த்து செய்யலாம்னு நினைக்கிறாங்க.

பாடல் உருவாகும் விதத்தை மக்கள் மத்தியில் நேரடியாகக் காட்ட வேண்டும்னு நினைக்கிறாங்க. அப்போ பாலசந்தர் ‘அவர்கள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முதல் பாடலாக காற்றுக்கென்ன வேலி, இருமனம் கொண்ட என இரு பாடல்களைக் கண்ணதாசன் எழுதி முடித்து விட்டார். எம்எஸ்வி. இசை அமைத்துள்ளார். அடுத்த பாடலை எழுதி வாங்க பாலசந்தர் நினைக்கிறார்.

அப்போ கண்ணதாசன் பிசியா ஆகிட்டாரு. அதனால இந்த சிறப்பு நிகழ்ச்சிக்குக் கண்ணதாசனை வரவைத்து மேடையிலேயே பாடல் எழுத வைப்பது என திட்டம் போடுகிறார்கள். அதற்காக கண்ணதாசன் மேடையிலேயே பாடல் எழுதப் போகிறார்னு விளம்பரமும் செய்றாங்க.

ஆனா கண்ணதாசனுக்கு இந்த விவரம் தெரியாது. பிறந்தநாள் நிகழ்ச்சின்னுதான் சொல்றாங்க. அப்போ பாலசந்தர் மேடையில் பாடல் உருவாகப் போற விஷயத்தைச் சொல்கிறார். கண்ணதாசனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. கிட்டத்தட்ட அவருக்கு ஒரு சவால்தான். ஆனா எப்படி பாட்டு எழுதுறாங்க? எப்படி இசை அமைக்கிறாங்கன்னு பார்க்க மக்களுக்கு ஆர்வம்.

அதே நேரம் கண்ணதாசனும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். பாலசந்தர் சிச்சுவேஷனை சொல்ல ஆரம்பிக்கிறார். சுஜாதாவின் காதல் தோல்வியில் முடியுது. ரஜினி கணவராக வந்து கொடுமைப்படுத்துகிறார். அப்போ அவர் கோபத்தில் சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார். அங்கு அப்பாவியாக கமல் வருவார். அவர் சுஜாதாவை ஒருதலையாகக் காதலிப்பார். ஒருகட்டத்தில் பிரிந்த முதல் கணவரும், மனம் திருந்தி ரஜினியும் அங்கு வந்து சுஜாதாவைப் பார்க்க வருகிறார்கள்.

சுஜாதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மூவரும் விழுந்து விழுந்து அவரைக் கவனிக்கிறார்கள். அப்போது சுஜாதாவின் வாழ்க்கை எதிர்காலம் யாருடன் என குழம்பி நிற்கிறாள். இது மிகப்பெரிய சிச்சுவேஷன். இதற்கு கண்ணதாசன் எப்படி உடனடியாக எழுத முடியும் என மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அப்போது பாலசந்தரிடம் கண்ணதாசன் ஒரு பல்லவியைச் சொல்கிறாள்.

‘அங்கும் இங்கும் பாதை உண்டு. இன்று நீ எந்தப் பக்கம்? ஞாயிறு உண்டு. திங்கள் உண்டு. எந்த நாள் இந்த நாளோ..’ன்னு பல்லவி எழுத மக்கள் கேட்டதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அந்தப் பாடலுக்கு 3 சரணம் வேணும்னு சொல்லவும் அதற்கும் சளைக்காமல் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் அது. மேற்கண்ட தகவலை அண்ணாத்துரை கண்ணதாசன் பத்திரிகை ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v