சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பாலசந்தர் முதன்முதலாக சந்தித்தபோது அபூர்வ ராகங்கள் படத்தின் ஆரம்ப வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தது. அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாத்திரம் இல்லை. ஒரு சிறிய கதாபாத்திரம் தான் இருந்தது. ஆனாலும் அந்தக் கதாபாத்திரத்திலே ரஜினிகாந்தை நடிக்க வைக்க வேண்டும் என்பதிலே பாலசந்தர் உறுதியாக இருந்தார்.
பாலசந்தர் படத்தில் நடிச்சா போதும்: அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் பாலசந்தர் ரஜினிகாந்தை அழைத்து ஒரே ஒரு காட்சி தான் இந்தப் படத்தில் இருக்குன்னு பாலசந்தர் சொல்லி இருந்தா கூட ரஜினிகாந்த் நடிக்க சம்மதித்து இருப்பார். ஏன்னா பாலசந்தர் படத்தில் நடிச்சா போதும்னு அன்றைக்கு இருந்தவர்தான் ரஜினி. அப்படி இருந்தபோதும் புதுமுக நடிகராயிற்றேன்னு ரஜினிகாந்தைப் பார்க்காம அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் பாலசந்தர்.
சின்ன ரோல்: இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் சின்ன ரோல்னு நினைக்காத. இதுதான் படத்துல முக்கியமான ரோல். ஸ்ரீவித்யாவின் கணவர் நீ. படத்தோட கிளைமாக்ஸ்சுக்கேக் காரணம் இந்தக் கேரக்டர்தான். அப்படிப்பட்ட ஒரு அழுத்தமான கேரக்டர் இது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் உனக்கு நல்ல நல்ல கேரக்டர் கொடுக்குறேன்னு சொன்னார் பாலசந்தர்.
கே.பாலசந்தர் அப்படிச் சொல்லச் சொல்ல அவரது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார் ரஜினி. என்னைப் பொருத்தவரைக்கும் நான் ஒரு சாதாரண நடிகன். அப்போ தான் நான் முதல் முதலா சினிமாவுல நடிக்க வாரேன்.
அக்கறை: அப்படி இருந்தும் அந்தக் காட்சியைப் பற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றியும் அவ்வளவு விளக்கமாக அவர் சொன்னாருன்னா ஒரு நடிகனோட வளர்ச்சியில எந்தளவு அக்கறைக் காட்டுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அக்கறைதான் அதற்குப் பின்னாலே இந்த சினிமா உலகில் என்னை நல்ல நடிகனாக்கியது என்று ஒரு பத்திரிகை பேட்டியிலே குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…