latest news
ராஜேஷிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள்… நினைவலைகளைப் பகிர்ந்த பாக்கியராஜ்!
Published on
கன்னிப்பருவத்திலே படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுதினேன். படத்துல முதல்ல ஹீரோவா நடிக்க வைக்க நானும் தயாரிப்பாளர் S.A.ராஜ்கண்ணுவும் விஜயகாந்த்தை செலக்ட் பண்ணி வச்சிருந்தோம். ஆனா குருநாதர் பாரதிராஜா தயாரிப்பாளர்கிட்ட ராஜேஷ் மேட்ச்சா இருப்பாருன்னு சொல்லிருக்காரு.
அப்புறம் தான் ராஜேஷ் படத்துக்குள்ளே வந்தாரு. அதே நேரம் அவரு ஒரு வாத்தியாரா இருந்தவரு. படத்துல அவருகூட நடிக்கிறதுக்கு ஒருத்தர் தேவைப்ட்டாரு. நான் அவருக்கு டயலாக் சொல்லிக் கொடுக்குறதை வச்சிப் பார்த்த தயாரிப்பாளர் நீங்களே இதுல நடிக்கலாமேன்னு சொல்ல, அப்படித்தான் நான் நடிச்சேன்.
ராஜேஷ் கூட பழகும்போதுதான் அவரு எவ்வளவு படிச்சிருக்காருன்னு தெரிஞ்சது. ஏதாவது ஒரு டவுட் கேட்டா கூட அதுக்கு அவருக்குப் பதில் தெரியலன்னாலும் அதைத் தேடிக் கண்டுபிடிச்சி சொல்வாரு. அப்படி வாத்தியாருக்கே உள்ள பொறுப்புணர்ச்சி அவருக்கு இருந்தது. அவரைக் கலைக்களஞ்சியம்னு சொல்லலாம்.
நிறைய ஆங்கிலப்புத்தகங்கள் படிப்பாரு. சினிமாவைப் பத்தி நிறைய படிப்பாரு. அதைப் பற்றி எங்கிட்ட நிறைய சொல்வாரு. என் படத்தைப் பற்றி எனக்கே தெரியாத வகையில் விளக்கத்தைச் சொல்வாரு. நான் அவ்ளோ படிக்கல ராஜேஷ்னு சொல்வேன். நீ படிக்கலன்னா என்ன உன் படத்துல தான் அது இருக்கேன்னு சொன்னாரு. அந்த 7 நாள்கள் படத்துல ஆரம்பத்துலயே கதையில ஒரு பூகம்பத்தை வச்சிருப்பீங்கன்னு சொன்னாரு. ரியல் எஸ்டேட் பண்றப்ப அவரு அதுல நல்லா வந்தாரு. எங்கிட்ட வந்து எனக்கு மரியாதை எல்லாம் பண்ணினாரு. என்னன்னு கேட்டப்ப, ரியல் எஸ்டேட்ல எனக்கு சினிமாவை விட நல்லா வருமானம் வருது.
அதுக்குக் காரணமே நீங்கதான். உங்களோட அந்த 7 நாள்கள் படம்தான் அந்த தொழிலுக்கு அஸ்திவாரம். எங்கே போனாலும் அதை மறக்காம கேட்குறாங்க. அந்தப் படத்துல என்னோட கேரக்டரைப் பார்த்ததும் பெருந்தன்மையான ஆளு. நிஜத்துலயும் அப்படித்தான் இருப்பார்;னு எனக்கு நான் கேட்குற ரேட்டைக் கொடுப்பாங்கன்னு சிலாகித்து சொன்னார். எனக்கு அது பெருமையா இருந்தது.
கன்னிப்பருவத்திலே படத்து ராஜ்கண்ணுவை அவர் முதல் பட தயாரிப்பாளர் அப்படிங்கறதால அவர் மறக்கவே இல்லை. அவருக்கு எப்ப எப்பல்லாம் கஷ்டம் வருதோ அப்போ எல்லாம் அதைக் கவனிச்சி அவருக்குக் கடைசி வரை உதவியா இருந்தார். அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அவரது படிப்பு, பழகும் தன்மையால சினிமா பிரபலங்கள் எல்லாரிடமும் நல்ல பழக்கம் வச்சிருந்தாரு. கமல், ரஜினி எல்லாருமே ராஜேஷ்னா ஒரு தனி மரியாதையைக் கொடுப்பாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...