Categories: latest news throwback stories

பாரதிராஜா முதல்ல யாருக்கிட்ட கதை சொன்னாருன்னு தெரியுமா? அட அவரா? நம்பவே முடியலயே!

இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் பழைய படங்களின் அனுபவங்கள் குறித்தும் தற்போது நடிப்பது குறித்தும் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷன்னு ஒண்ணு உண்டு. பட்ஜெட் படங்கள் பண்ணலாம். தாகம்னு ஒரு படம் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல இருந்து பண்ணாங்க. அதுல நான் ஒர்க் பண்ணிருக்கேன். அப்புறம் மெயில்னு ஒரு சின்ன ஸ்கிரிப்ட் பண்ணினேன்.

அது அனுப்பிச்சி ரிஜெக்ட் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல. இன்னொரு கதை பண்ணினேன். சொந்த வீடுன்னு. முதன்முதலா நான் மேடம் ஜெயலலிதாவுக்குத்தான் கதை சொல்லிருக்கேன்.

புதுமைப்பெண் படம் தான் முதல் ஸ்கிரிப்ட். அதுதான் முதல் படமா இருக்க வேண்டி இருந்தது. அதுக்கு அப்புறம் பல காரணங்களால தள்ளிப் போயிடுச்சு. அதுக்குப் பிறகு 16 வயதினிலே. அந்தப் படத்தை முதல்ல பிளாக் அண்ட் ஒயிட்ல தான் எடுக்கறதா இருந்தது. நாகேஷ், ரோஜாரமணியும் போட்டு எடுக்கலாம்னு இருந்தேன்.

அப்புறம்தான் பொள்ளாச்சில இருந்து ராஜ்கண்ணு தயாரிப்பாளர் வந்தாரு. அவருக்கு நான் 3 கதை சொன்னேன். சிவப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே. இதுல பதினாறு வயதினிலே பிடிச்சிருந்தது.

jayalalitha

முதல்ல நாகேஷ் நடிக்கறதா இருந்தது. அப்புறம்தான் இதுல அழகான முகத்தை மாற்றிப் போட்டாத்தான் கதையில உட்காரும்னு நினைச்சி கமலைக் கொண்டு வந்தேன். ஸ்ரீதேவியை நடிக்க வச்சேன். 5 லட்ச ரூபா பட்ஜெட்ல எடுத்தது.

கமல் அதுக்கு சம்மதிச்சதுக்குக் காரணம் அவரோட அட்வான்ஸ் மைன்டு. நான் சொன்ன உடனே ரெண்டே சட்டைதான். ஒரு வேஷ்டி. அப்படி அவரே அழுக்காக்கிப் போட்டுக்குவாரு. கோவணம் கட்டி நடிக்கறதுன்னா அவரு பெரிய ஹீரோ இல்லையா. அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன வேணுமோ அதுக்கு தன்னோட இமேஜைப் பற்றிக் கவலைப்பட மாட்டாரு. எனக்குத் தெரிஞ்சி சப்பாணியாவே வாழ்ந்துட்டான் கமல் என்கிறார்.

இடையில் நடிகை ராதா போன்ல பாரதிராஜாவிடம் கேள்வி கேட்கிறார். அப்போ நீங்க நடிச்ச நடிப்புக்கும் இப்ப நடிக்கறதுக்கும் எப்படி ஃபீல் பண்றீங்கன்னு கேட்டார். அதற்கு பாரதிராஜா சொன்ன பதில் தான் இது. நான் எவ்வளவோ பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துருக்கேன்.

ஆனா இப்போ நடிக்கிறது எவ்ளோ சிரமம்னு தெரியுது. மெமரி பவர் வேணும். டைமிங் சென்ஸ், ரிதம் சென்ஸ்னு வேணும். சுற்றி கேமராமேன், லைட்டிங்ஸ்னு யூனிட்ல நிறைய பேரு இருப்பாங்க. இதுக்குள்ள தன்னை மறந்து அந்தக் கேரக்டரை உள்வாங்கி நடிக்கணும். அப்படி அந்த இயல்புக்குப் போறதுங்கறது ரொம்ப கஷ்டம். ரொம்ப பேரை நான் கொடுமைப்படுத்திட்டேனே…ன்னு சிரித்துக்கொண்டே சொல்கிறார் பாரதிராஜா.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் நந்தா பெரியசாமி இயக்கிய திரு.மாணிக்கம். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா உடன் இணைந்து பாரதிராஜா நடித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v