Categories: latest news throwback stories

எம்ஜிஆருக்கு முன்பணம் கொடுக்க முடியாமல் திணறிய சந்திரபாபு… உதவி செய்தது அவரா?

பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடி வீட்டு ஏழை. அந்தப் படம் தொடர்ச்சியாக போகாமல் இடையில் நின்று போனது. அதற்குக் காரணம் எம்ஜிஆருக்கு சம்பளம் கொடுக்க சந்திரபாபுவிடம் பணம் இல்லை. குறைந்தபட்சம் எம்ஜிஆருக்கு 25 ஆயிரம் ரூபாயாவது முன்பணம் கொடுக்கணும். ஆனால் அவரிடம் பணம் இல்லை.

இதனால் தோழி சாவித்திரியிடம் கேட்க அவரும் உதவும் மனப்பான்மை கொண்டவராக இருந்ததால் உடனடியாக 25 ஆயிரம் ரூபாயை சந்திரபாபுவிடம் கொடுத்து விட்டார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிற உங்களுக்கும் முன்பணம் கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன்.

ஆனால் அதை எங்கே இருந்து கொடுப்பது? நானே உங்ககிட்ட வாங்கித்தான் எம்ஜிஆருக்குக் கொடுக்கிறேன் என்று சொன்னார் சந்திரபாபு. அப்போது சாவித்திரியும் நான் உங்ககிட்ட முன்பணம் கேட்டேனா? நீங்க படப்பிடிப்பை ஆரம்பிங்க. உங்களுக்கு எப்போ கொடுக்க முடியுமோ அப்போ கொடுங்க. எந்த அவசரமும் இல்லைன்னு அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சாவித்திரியைப் பொருத்தவரை வெளியுலகில் மட்டும் இல்லாமல் திரை உலகைச் சார்ந்த தனது நண்பர்களுக்கும் எந்தளவு உறுதுணையாக இருந்தார் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். அந்தளவு பெருந்தன்மையோடு சாவித்திரி உதவியும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை என்பதும் உண்மை. அந்தப் படத்தினால சந்திரபாபு மிகப்பெரிய நட்டத்தை சந்திக்க நேர்ந்தது என்பதும் சோகமான விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு தயாரிக்க நினைத்த மாடிவீட்டு ஏழை படத்திற்கு எம்ஜிஆரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. காலதாமதம் ஆனது. அதனால் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இயக்குனராக அறிமுகமாக இருந்த சந்திரபாபுவுக்கு பெரிய நஷ்டம். படத்துக்கு சந்திரபாபு கணிசமாக முதலீடு செய்தார்.

இருந்தும் சில நிதி நெருக்கடிகள் படத்தை நகர விடாமல் செய்தன. கடைசியாக எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து அதே பெயரில் 1981ல் படம் வெளியானது. இதை பூம்புகார் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை எழுதியவர் மு.கருணாநிதி. அமிர்தம் இயக்கிய அந்தப் படத்தில் சிவாஜி, ஸ்ரீபிரியா, சுஜாதா உள்பட பலர் நடித்தனர்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v