Connect with us

latest news

உன்னால் முடியும் தம்பி படத்திற்காக பாலசந்தரை அழ வைத்த கமல்… இப்படி எல்லாம் நடந்ததா?

பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்தில் அறிமுகம் ஆனார். இவரது படங்களைக் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பாலசந்தர் இயக்கினார். அதனால் இவரது பெயருடன் கவிதாலயா ஒட்டிக் கொண்டது. கவிதாலயா கிருஷ்ணன் ஆனார். இவர் சமீபத்தில் யூடியூப் சானல் ஒன்றில் பாலசந்தர், கமலுக்கு இடையே நடந்த உரையாடல், நட்பு, படங்கள் குறித்து பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

உன்னால் முடியும் தம்பில கமல், பாலசந்தர் ரெண்டு பேரும் செல்லமா சண்டை போட்டுக்கிட்டாங்க. சண்டை போட்டு பத்தாவது நிமிஷம் பாலசந்தர் அழுதுட்டாரு. கமல் எங்கூட சண்டை போட்டுட்டாண்டான்னாரு. அவரு எல்லாத்துக்கும் கமலைத்தான் சொல்வாரு. ரஜினிகாந்தைப் பொருத்தவரைக்கும் பாலசந்தர் மேல பக்தி, பயம் உண்டு. இதைப் பண்ணிக்கட்டுமா சார்னு கமல் கேட்பாரு.

ஏதாவது ஒண்ணைப் பண்ணுடா. பத்தைப் பண்ணாதேன்னு செல்லமா திட்டுவாரு. குணா படம் பார்த்துட்டு வர்றோம். எனக்கு அந்தப் படம் பிடிக்கல. அப்போ பாலசந்தர் சார். என்னடா படம்? எவ்வளவு வேஸ்ட் பண்ணிட்டான் பாருன்னு சொல்றாரு. நான் வந்து அவரு சொன்னதை ஆமோதிக்கணும்கறதுக்காக படம் போர் சார்னு சொன்னேன்.

உடனே ‘எங்கடா போர்?’னு கத்துனாரு. ‘ஒரு படம் பண்ணுவியாடா நீ தமிழ்சினிமாவுல?’ன்னாரு. உடனே பக்கத்துல இருந்தவர் ‘நீங்க சொன்னதால தான அவனும் சொன்னான். எதுக்கு அவனைத் திட்டுறேள்’னு கேட்டாரு. ‘யாராவது கமலைப் பத்தி கெட்டதா பேசுனா எனக்குப் பிடிக்காது.

ஒரு ஏக் துஜே கேலியே யாராவது பண்ணுவானா? அவனை மாதிரி யாரு பண்ணுவா? லவ் சப்ஜெக்ட். என்ன சினிமா? அவனுக்குத் தெரிஞ்ச சினிமா யாருக்கும் தெரியாது. எனக்கே தெரியாது. கிரேட் மேன்னு வச்சிக்கோயேன்னு சொன்னாரு. ‘இல்ல சார். நீங்க தான் படம் போர்னு சொன்னீங்க’. ‘படம் போர் தான். ஆனா நல்ல படம்.

எனக்கு பொறாமையா இருக்கு. சலங்கை ஒலியைப் பார்த்துட்டு இந்த மாதிரி படம் பண்ணலையேன்னு எனக்குப் பொறாமையா இருக்குன்னாரு பாலசந்தர். சங்கராபரணம் இன்ஸ்பிரேஷன்தான் சிந்து பைரவி’ என்கிறார் கவிதாலயா கிருஷ்ணன்.

பாலசந்தர் இயக்கத்தில் உன்னால் முடியும் தம்பி படம் 1988ல் ரிலீஸ் ஆனது. ஓடாதுன்னு கமல் சொன்னாராம். அது பாலசந்தருக்குப் பிடிக்கவில்லையாம். அதே போல் அந்தப் படமும் ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதே நேரம் இன்று வரை பேசப்படும் படங்களில் அதுவும் ஒன்று. தொடர்ந்து பாலசந்தரின் படங்களில் கமல் நடிக்கவில்லை. பார்த்தால் பரவசம் படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top