Connect with us

latest news

டெல்லி கணேஷை வில்லனா நடிச்சித்தான் பார்த்திருப்பீங்க… ஹீரோவா பார்க்கலேல்ல… இப்ப பாருங்க..!

டெல்லி கணேஷ் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்துத் தான் நமக்குத் தெரியும். ஆனா அவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார். வாங்க என்ன படம்னு பார்க்கலாம்.

பாலசந்தரின் அறிமுகம்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் என்றாலே அவர் யாராக இருந்தாலும் பிரபலம் ஆகி விடுவார். 2024 நவம்பர் 9ல் காலமானார். இவர் 400க்கும் மேல் படங்களில் நடித்துள்ளார் என்றால் ஆச்சரியம்தான்.

கமலுடன் பல படங்கள்: கமலின் நெருங்கிய நண்பர். அதனால் மட்டுமல்ல. உண்மையில் திறமைசாலி என்பதாலும் அவர் கமலுடன் பல படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரது நடிப்பு மாஸாக இருந்தது. நாயகன், ஹேராம், அவ்வை சண்முகி ஆகிய படங்களில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

விமானப்படை: மிகைப்படுத்தாத நடிப்பை நடித்து ரசிகர்களின் மத்தியில் பெயர் வாங்கியவர் இவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஸ்டாலின், கமல், ரஜினி என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவர் விமானப்படையில் பணியாற்றியவர் என்பதால் இறுதி ஊர்வலத்துக்கு விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்தனர்.

பல படங்களில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என்று நடித்த இவருக்கு ஹீரோ அந்தஸ்தைப் பெற்றுத் தந்த படம் உள்ளது. என்னன்னு பார்க்கலாமா…

ஹீரோ: இப்ராஹிம் இயக்கிய தணியாத தாகம். இது 1982ல் வெளியானது. இந்தப் படத்தில் தான் டெல்லி கணேஷ் ஹீரோவாக நடித்து இருந்தார். ஹீரோயின் சுபத்ரா. இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் ராஜ். இந்தப் படத்தில் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது. இது அவசியம் அனைவரும் காண வேண்டிய படம். டெல்லி கணேஷின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கண்டு களிக்கலாம்.

பட்டினப்பிரவேசம்: டெல்லி கணேஷ் 1976ல் பட்டினப்பிரவேசம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே சிறந்த நடிப்புக்காக ரசிகர்கள் மத்தியில் அப்ளாஸை அள்ளினார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பாவூர். 1964 முதல் 1974 வரையிலான 10 ஆண்டுகள் இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top