சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே தேவாவுக்கு எங்கிருந்துதான் சக்தி வருமோ தெரியல. மனுஷன் பிச்சி விளாசிடுவார். மியூசிக்கை தெறிக்க விட்டு இருப்பார். ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்கிற டைட்டில் கார்டு மியூசிக் போட்டவரே அவருதான். அண்ணாமலை படத்துக்குத் தான் இப்படி போட ஆரம்பிச்சாரு. அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் அடுத்தடுத்த படங்களிலும் அது தொடர்ந்தது.
பாட்ஷா: அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்திலும் பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பி இருக்கும். ரஜினிக்கு மட்டும் எப்படி இந்தளவுக்கு மியூசிக்கு தேவாவிடம் கேட்டால், அப்படின்னு இல்லை.
அவங்க மனநிலை: நாம வந்து அந்தப் படத்துல வர்ற கேரக்டருக்காகவும், அதே சமயம் அந்த நடிகரோட ரசிகர்களுக்காகவும் திருப்தி வரும் வகையில் மியூசிக் போடறோம். அவங்க திருப்தியா இருந்தா தான் நமக்கு திருப்தி. நானும் அவங்க மனநிலையில் இருந்துதான் அந்தப் பாடலை ரசிப்பேன். கமலுக்குப் போடும்போது அவரோட ரசிகர்கள் இடத்துல இருந்து பார்ப்பேன்.
காப்பிரைட்ஸ்: ரஜினிக்குப் போடும்போது அவர் எவ்ளோ பெரிய சூப்பர்ஸ்டார். எவ்ளோ ரசிகர் பட்டாளம் என்பதை உணர்ந்து அவங்க இடத்துல இருந்து பார்ப்பேன். அதுக்கு ஏற்ற மாதிரி மியூசிக் போடுவேன் என்கிறார் தேவா. அதே சமயம் இவர் தனது பாடல்களுக்கு காப்பிரைட்ஸ் வாங்கறது இல்லை என்கிறார்.
என்னோட பாடல்கள் மூலமா பணம் வரும். ஆனா புகழ் வராது. என் பாட்ட இப்ப வர்ற படத்துல கூட போடுறாங்க. அதனால 2கே கிட்ஸ் வரைக்கும் தெரியுது. பணத்தை விட குழந்தைங்க ரசிக்கணும். அதான் முக்கியம். இது எவ்ளோ கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்கிறார்.
அதே போல ரஜினி நடித்த படத்துக்கு 10 நிமிஷத்துல ஒரு பாட்டு ரெடி பண்ணியிருக்கார். அதுபற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க.
அண்ணாமலை: பாலசந்தர் சார் எனக்கு போன் பண்ணி, தேவா நீ என்ன பண்ணுவன்னு தெரியாது. நாளைக்கு எனக்கு ஒரு பாட்டு வேணும். ரஜினி, குஷ்பூ கால்ஷீட் கொடுத்துருக்காங்க. 3 மணிக்கு ரெக்கார்டிங். அப்படின்னு சொல்லிட்டாரு.
அடுத்த நாள் காலைல 7 மணிக்கு ஆரம்பிச்சேன். 7.10க்கு முடிச்சிட்டேன். பாட்டு செம ஹிட். அதுதான் ‘ரெக்கைக் கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்’ என்ற பாடல் என்கிறார் தேனிசைத் தென்றல் தேவா.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…