ஒரு இயக்குனருக்கு பட வாய்ப்பு வந்தால் அதை அவர் முறையாகப் பயன்படுத்திக் கொள்வார். அதுதான் யதார்த்தம். ஆனால் இங்கு ஒரு இயக்குனர் வித்தியாசமாக தேடி வந்த தயாரிப்பாளரைத் திருப்பி அனுப்பி விட்டுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் அவருக்கு அட்வைஸ்சும் சூசகமாகப் பண்ணி பல்ப் கொடுத்துள்ளார். அதுவும் அந்த இயக்குனர் சாதாரண ஆள் கிடையாது. அஜித்தை வைத்து மாபெரும் வெற்றிப் படம் இயக்கியவர். யார் அவர்? அப்படி என்னதான் சம்பவம் நடந்தது? அதை அவரே சொல்கிறார். வாங்க என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போம்.
ஒரு தயாரிப்பாளர் எங்கிட்ட வந்து ‘சார் நான் நிறைய பணம் வைத்திருக்கிறேன். நம்ம படம் பண்ணுவோம்’ என்று சொன்னார். அதற்கு நான் அவர்கிட்ட ‘வெளிநாடுகள் எல்லாம் சுத்தி பார்த்து இருக்கீங்களா என்று கேட்டேன். நல்லபடியா பாஸ்போர்ட் எடுத்துட்டு போயிட்டு குடும்பத்தோட உலக நாடுகளை சுத்திப் பார்த்துட்டு வாங்க.
வாழ்க்கையில சம்பாதிச்சு உலக நாடுகளை சுற்றிப் பார்த்தோம் என்றாவது இருக்கும்’னு சொன்னேன். தொழிலோட நுணுக்கங்கள் தெரியாமல் தயாரிப்பாளர்கள் வரக்கூடாது.
எனக்கு என்னவென்றால் தேவையில்லாமல் ஒருத்தருடைய காசை வாங்கி போட்டு படம் எடுக்கக்கூடாது. என்னால நஷ்டமான ஒரே தயாரிப்பாளர் நான் மட்டும்தான். என்னை வைத்து படம் பண்ண மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் நல்லா சம்பாதித்து இருக்கிறார்கள் என்கிறார் இயக்குனர் அகத்தியன்.
1996ல் அகத்தியன் இயக்கிய அஜித்தின் சூப்பர்ஹிட் படம் காதல் கோட்டை. சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. பார்க்காமலே காதல் என்ற அந்த ஒற்றை வரி தான் எல்லாவற்றுக்கும் காரணம். அஜித், தேவயானி, ஹீரா, கரண், தலைவாசல் விஜய், மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ரகங்கள். இந்தப் படத்தின் இயக்குனர் தான் அகத்தியன். இந்தப் படம் வந்த பிறகு பரபரப்பாகப் பேசப்பட்டார். அவர் சொன்ன கருத்து தான் இப்போது வைரல் ஆகியுள்ளது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…