latest news
ஆணவம் தலைக்கேறிய இயக்குனருக்கு சிவாஜி புகட்டிய பாடம்… டைரக்ட் செய்து அசத்திய நடிகர்திலகம்
Published on
நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாதுன்னு நீங்க நினைச்சா அது தப்பு. அவர் படம் கூட டைரக்ட் பண்ணிருக்காரு. என்னன்னு பார்க்கலாமா…
நீங்க எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பைப் பற்றி எவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கீங்க. நீங்க ஏன் ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணக்கூடாதுன்னு ஒரு சமயம் சிவாஜியிடம் கேட்டார்களாம். அதற்கு சிவாஜி சொன்ன பதில் இதுதான். ‘என்னால டைரக்ஷன் பண்ண முடியாதுன்னு இல்ல. எனக்கு நடிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு.
நான் டைரக்ஷன் பண்ணினா என்னை நம்பி பல படங்கள் எடுத்துக்கிட்டு இருக்குறவங்களுக்கு அதனால காலதாமதம் வரலாம். நடிக்கிறது என்னோட தொழில். டைரக்ஷன் பண்றது வேற ஒருத்தங்களோட தொழில். அவங்க தொழில்ல நான் குறுக்கிட விரும்பல’ன்னு சொல்லி இருந்தார் சிவாஜி.
இயக்குனர் கே.விஜயன் சிவாஜிக்கு திரிசூலம், தியாகம்னு பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரது முதல் படத்திலும் சிவாஜி கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் தன்னோட டைரக்ஷன் திறமையால் தான் சிவாஜியின் படம் ஓடுகிறது என்று கருதினார் கே.விஜயன். சிவாஜியின் ரத்தபாசம் படத்துக்கு வராம காலதாமதம் செய்தார் இயக்குனர் கே.விஜயன்.
ஏன்னா அந்த சமயத்தில் விஜயகாந்துக்கு தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கப் போய்விட்டார். இப்படி காலதாமதம் செய்து கொண்டே இருந்தார். ரத்தபாசம் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இது பெரிய பட்ஜெட், பல நடிகர்கள் நடித்தது. படத்திற்கான காலதாமதம் பற்றி விஜயன் சிவாஜிகிட்ட எதுவுமே தகவல் கொடுக்கல.
இந்நிலையில் கே.விஜயன் பத்திரிகைகளுக்கு தன்னோட படங்களோட வெற்றி குறித்து பேட்டி கொடுத்துள்ளார். சிவாஜிக்கு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் அவரது சகோதரர் சண்முகம் தாங்க மாட்டார். அந்த வகையில கே.விஜயனின் செயல் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால டைரக்ஷன் பண்ற பொறுப்பில இருந்து கே.விஜயனைத் தூக்கிட்டாங்க.
அந்த சந்தர்ப்பத்தில் சிவாஜியை இயக்குவது என்பது முடியாத காரியம். அதனால் அவரே தான் சம்பந்தப்பட்ட காட்சியை இயக்கினார். கடைசியாக விஜயன் தன்னோட தப்பை உணர்ந்து 1985ல் சிவாஜியுடன் மறுபடியும் இணைந்தார். அதுதான் பந்தம்.
அந்தப் படத்தில் கார் டிரைவர் ஒரு தப்பை செய்ததால் ஒரு காட்சியில் அவரை வேலையை விட்டு நிறுத்திடுவார். அதே டிரைவர் வேறொரு காட்சியில் தப்பை உணர்ந்து மறுபடியும் சிவாஜியுடன் சேர்வார். படத்தில் இந்தக் காட்சியை வைக்கக் காரணம் முன்னாடி இருந்த சம்பவம்தானாம்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...