Connect with us

latest news

முதல் படத்துலேயே பாலசந்தருக்கு இவ்ளோ பிரச்சனைகளா? அதிலும் அந்த கமெண்ட்தான் விசேஷம்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. இந்தப் படத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றை ஒவ்வொன்றாகச் சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். வாங்க பார்க்கலாம்.

ஆடி அடங்கும்: இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட முதல் பாடல் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா….’ அந்தப் பாடல் பதிவுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட சூழ்நிலையில் அந்தப் பாடல் பதிவு நடைபெறவில்லை.

இதெல்லாம் விளங்குமா: பொருளாதார பிரச்சனை காரணமா? அல்லது வேற பிரச்சனை காரணமா என பாலசந்தருக்குத் தெரியாது. ஆனா அந்தப் பாடல் ரத்தான பிறகு அங்க இருந்த ஒருவர் எதைப்பற்றியும் கவலைப்படாம ஒரு கமெண்ட் அடித்தார். ‘என்ன படம்..? படம் பேரு நீர்க்குமிழி. பாட்டு என்னன்னா ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடான்னு. இதெல்லாம் விளங்குமா’ன்னு சொன்னாராம்.

டைட்டிலை மாத்திடலாமா: இதைக்கேட்டதும் பாலசந்தருக்கு மிகப்பெரிய சங்கடம். ஏன்னா அதுதான் முதல் படம். தயாரிப்பாளர் ஏ.கே.வேலன்கிட்ட போய் படத்தோட ‘டைட்டிலை மாத்திடலாமா’ன்னு கேட்டாராம்.

அவரோ படத்தோட ‘டைட்டிலையும் மாத்த வேணாம். பாடலையும் மாத்த வேணாம்’னு சொல்லி விட்டாராம். அதன்பிறகு அந்தப் பாடலைப் பாடுவதற்கு ஒரு பிரபல பின்னணிப்பாடகரிடமும் பேசி விட்டார்களாம். ‘யாருக்குப் பாடணும்? நாகேஷூக்கா? என்னோட தலை எழுத்தைப் பாருங்க.

கமெண்ட்: நாகேஷூக்கு எல்லாம் பாட வேண்டியிருக்கு’ன்னு சொன்னாராம். உடனே அந்தப் பாடகரை மாற்றி விட்டு சீர்காழி கோவிந்தராஜனை வைத்துப் பாடச் செய்தாராம் கேபி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நீர்க்குமிழி: 1965ல் இயக்குனர் பாசந்தர் இயக்கிய முதல் படமாக நீர்க்குமிழி வெளியானது. நாகேஷ், சௌகார் ஜானகி, ஜெயந்தி, மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வி.குமார் இசை அமைத்த படம். ஏ.கே.வேலன் தயாரித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top