latest news
கவுண்டமணிக்கும், சுருளிராஜனுக்கும் கடும் மோதல்… அட… இதுக்காகவா சண்டை போட்டாங்க..?
Published on
கவுண்டமணிக்கும், சுருளிராஜனுக்கும் என்ன மோதல் என திரைக்கதை ஆசிரியரும், டைரக்டருமான புகழ் மணி தனது கருத்துகளைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க…
1978ல் வெளியான படம் இவள் ஒரு சீதை. இந்தப் படத்தில் விஜயகுமார், சுமித்ரா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், காந்திமதி, குள்ளமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துல சுருளிராஜன் சார் தான் காமெடி. ‘வீரப்பன் சார் இருக்காரு. அவரைக் கூப்பிட்டு காமெடி எழுதிக்கறேன்’னு சொல்றாரு. ‘இந்தப் படத்துல நல்ல ரைட்டர் இருக்காரு’ன்னு ஜெகநாதன் சொல்றாரு. ‘புது ரைட்டர்தான். நீங்க ஒருமுறை கேளுங்க. சரியா வரலைன்னா அவருக்கிட்ட போங்க’ன்னு சொல்றாரு.
‘சரி அவரைக் கூப்பிடுங்கன்னாரு. நான் போய் அந்த சீனை எல்லாம் படிச்சேன். நாடகக் கம்பெனியில இருந்தீயா…’ன்னு கேட்டாரு. ‘ஆமா. திருச்சி ஜிஎஸ்.நாடக சபா’ன்னு சொன்னேன்.
pugazh mani
கவுண்டருக்கும் (கவுண்டமணி) அவருக்கும் ஆகாது. தேவி நாடகசபாவுல இருக்கும்போதே இரண்டு பேருக்கும் இடையே பெரிய போட்டி. ஆரம்பத்துல நாடகக் காலத்துலயே இரண்டு பேருக்கும் பெரிய தகராறு. அவரு எல்டாம்ஸ் வாசல்ல நிக்குற போது கூட சுருளிராஜனும் வளர ஆரம்பிச்சிட்டாரு.
அதனால இவரு அவரைத் திட்டிக்கிட்டே தான் இருப்பாரு. அப்படி ஒரு மோதல் இருந்தது. நானும் நாடகத்துல இருந்ததை அவரிடம் சொன்னேன். அதான் எழுத்துல தெரியுதேன்னாரு. நல்லா இருக்குன்னு சொன்னாரு. உடனே வீரப்பன் சாரை அனுப்பிச்சிட்டாரு. அது கதையோட ஒட்டி வரும் காமெடி.
படத்துல நல்லா இருந்ததால தெலுங்குலயும் அதை அப்படியே வச்சிட்டாங்க. அதனால அந்தக் கேரக்டருக்காக சுருளிராஜனை அங்கேயும் அழைச்சிட்டாங்க. அதை இவரு திறமையா பண்ணினாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ்.சந்திரன், சுருளிராஜன்னு பலரையும் பற்றிப் பேசியுள்ளார். இயக்குனர் ராம நாராயணன் படங்களில் இவர் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடிவிரதம், துர்கா போன்ற படங்களைச் சொல்லலாம்.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...