Connect with us

latest news

2 கிழவிகளை நம்பி படம் எடுத்து ஹிட் கொடுத்தாங்க… இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் ‘பளீச்’ தகவல்

விஷூவல் படிக்கிறவங்களுக்கு வந்து படிப்பு மட்டுமே ஹெல்ப் பண்ணாது. நாம பார்க்குற பார்வை, சிந்தனை தான் ஹெல்ப் பண்ணும். எம்எஸ்.விஸ்வநாதன் சொன்ன உடனே அதை ஒரு வருஷமா ஓடுற கதையா எடுக்குறோம். அதுதான் நான் பாடும் பாடல்.

அந்தப் படத்தைப் பார்த்தது குறித்து குட்டி பத்மினி இப்படி சொல்கிறார். அந்தப் படத்தை காசினோ தியேட்டர்ல பார்த்தேன். ஷோ முடிஞ்சிப் போச்சு. அப்புறமும் உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தாராம்.

காதலிக்க நேரமில்லை, எங்க வீட்டுப்பிள்ளை, பட்டிக்காடா பட்டணமா படத்தை ரசிக்கலையா? ரத்தக்கண்ணீர்னு ஒரு படம். 60 வருஷத்துக்கு முன்னாடி வந்தது. தன்னோட மனைவியை நண்பனுக்குக் கட்டி வச்ச அந்தப் படம் ஓடலையா?

naan padum padal

naan padum padal

சொல்ல வேண்டிய விதம் கரெக்டா சொல்லணும். நான் பண்ணுற எல்லா படமும் ஆசைப்பட்டு நேசிச்சிப் பண்றோம். சிவாஜி சாரைப் பற்றி பெய்லியர் பண்ணிட்டு நாகேஷை வச்சி ஹிட் கொடுத்துருக்காருன்னா அந்தக் கதைக்குத் தகுந்த மாதிரி ஆர்டிஸ்டைப் போடணும்.

அப்படி ஏமாந்ததுல நம்மளும் உண்டு. நாங்க வரும்போது நாகேஷ் இல்ல. முதல்ல தங்கவேலு, அப்புறம் நாகேஷ். நாங்க வரும் போது வெற்றிடம் இருந்தது. பாக்கியராஜ் வரும்போது கவுண்டமணியையும் தூக்கிட்டு வந்தாரு.

முதல்ல இது என்ன கதைன்னு போட்டுக் காட்டி இது கிராமியப்படம்னா பாரதிராஜா, பாக்கியராஜ்னு வரச் சொல்லி படத்தைக் காமிப்பாங்க. அவங்க இதுல என்ன இருக்குன்னு கேட்டா படத்தோட கதையை மாற்ற மாட்டாங்க. டைரக்டரை மாற்றுவாங்க. டைரக்டரும் ஓகே சொல்லலன்னா ரைட்டர கூப்பிட்டுப் போட்டுக் காட்டுவாங்க.

annai movie

annai movie

சி.எல்.ஆனந்தையும், குமாரையும் வச்சிக்கிட்டு எவ்ளோ பெரிய சக்சஸ் கொடுத்தாங்க. ஒரு ஊமைப்பையனையும், நாயையும் நம்பி ராமுன்னு ஒரு படம் எடுக்கலயா? 2 குழந்தைகளை நம்பி குழந்தையும், தெய்வமும். நீங்க தானே நடிச்சீங்க என்கிறார் ஆர்.சுந்தரராஜன். தொடர்ந்து, அதெல்லாம் விடுங்க.

2 கிழவிகளை நம்பி ‘அன்னை’ன்னு ஒரு படம் எடுத்தாங்க. என்ன பாட்டு இல்ல. என்ன காமெடி இல்ல. என்ன கருத்து இல்லாமப் போச்சு. அதுல எல்லாமே இருக்கு. திமிரு பிடிச்ச ரைட்டரால தான் சினிமா வாழும். அதே மாதிரி திமிரு பிடிச்ச டைரக்டரா இருந்தா தான் எந்த ஆர்டிஸ்ட்டா இருந்தாலும் வாழ முடியும். இது பட்டவர்த்தனமான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1962ல் ஏவிஎம் தயாரிக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். எஸ்.வி.ரங்கராவ், பானுமதி, சௌகார் ஜானகி, டி.எஸ்.முத்தையா, குமாரி சச்சு, சந்திரபாபு, நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.சுதர்சனம் இசை அமைத்துள்ளார். அழகிய மிதிலை, புத்தியுள்ள உள்பட பல சூப்பர்ஹிட்பாடல்கள் உள்ளன.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top